முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதி மீறல்: நடிகை குஷ்பு கைது செய்யப்படுவாரா?

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      சினிமா
Image Unavailable

 

ஆண்டிபட்டி அக்-19 - நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த போது தேர்தல் கமிசன் அறிவித்த விதிமுறைகளை மீறி அதிகமான வாகனங்களுடன் சென்று போக்குவரத்திற்கு இடையூறாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிளும் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் தேனி பகுதிகளில் அதிகமான வாகனங்களுடன் வந்து தேசி நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்து பிரச்சாரம் செய்தார். இதனால் ஆண்டிபட்டி மற்றும் பழனிசெட்டியபட்டி காவல் நிலையங்கள் இந்திய சட்டம் 171, 188 கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 26.03.2011 பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளுக்காக பலமுறை சம்மன் அனுப்பியும் கோர்ட்டில் குஷ்பு ஆஜராகவில்லை. இந்நிலையில் தனக்கு சீமானைப் போல் பிடிவாரண்ட் பிறப்பித்து விடுவார்களோ என பயந்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நடிகை குஷ்பு முன்ஜாமீன் மனு சமர்ப்பித்தார். இந்த மனுவின் மீது விசாரணை மேந்கொண்ட நீதிபதிகள் சம்மந்தப்பட்ட ஆண்டிபட்டி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி பினையில் செல்லலாம் என அறிவுறுத்தினர். அதன்படி நேற்று நடிகை குஷ்பு தனது வக்கில்களுடன் ஆண்டிபட்டி கோர்ட்டுக்கு வந்தார். ஆனால் நீதிபதி சுந்தரராஜன் விடுப்பில் சென்றதால் அவருக்கு பெயில் கிடைக்கவில்லை. மீண்டும் அவர் பொறுப்பு நீதிபதி பெரியகுளம் நடுவர் நீதிமன்றத்திற்கு சென்றார். அங்கும் நீதிபதி சங்கர் விடுப்பில் சென்றதால் வாடிய முகத்துடன் முன் ஜாமீன் கிடைக்காமல் சென்னைக்கு திரும்பிச் சென்றார்.

நீதிபதிகள் விடுமுறையில் இருப்பது கூட தெரியாமல் தன்னை அலைக்கலைப்பு செய்த தனது வக்கீல்களை நடிகை குஷ்பு நொந்துகொண்டு கடிந்து பேசினார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் சரணடையாமல் செல்லும் நடிகை குஷ்புமீது பிடிவாரண்ட் உள்பட பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என எதிர்பார்ப்பு நிலவுகிறது. நடந்து முடிந்த சட்ட மன்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள அ.தி.மு.க தலைமை குறித்து பல்வேறு விமர்சனங்களை மேற்கொண்ட குஷ்பு கட்சி மாறும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!