எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.4 - திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா மரணமடைந்ததையொட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த 1.11.2011 அன்று எழுதியுள்ள இரங்கல் கடிதம் வருமாறு: தங்களின் அன்பு மனைவி ஜீவா அவர்கள் நேற்று இரவு திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடு செய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் அளிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். அன்பு மனைவியை இழந்து வாடும் தங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


