முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூரில் மழை வெள்ளத்தால் 10 பேர் பலி: 20 பேர் மாயம்

செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பூர், நவ.- 8 - திருப்பூர் நொய்யல் ஆற்றில் கன மழையால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் முல்கின. இச்சமவத்தில் 10 பேர் பலியாகிறனர். 20க்கும் மேற்பட்டடோர் மாயமானார்கள். தமிழகம் முழுவதும் கடந்த 1 வாரமாக பருவ மழை பெய்து வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட பல பகுதிகளில் அணைகள் நிரம்பி வருகிறது. இன்நிலையில் திருப்பூரில் நேற்று முன் தினம் இரவு முழுவதும் கனத்த மழை பெய்தது. கோவையில் பெய்த மழையால் அருகில் உள்ள குளங்கள் நிறைந்து உடைந்ததாளும் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கேடுத்து ஓடி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.  ஜாமுனை பள்ளம் சத்தியா நகர் டைய்மன்ட் தியேட்டர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் இரவு நேரத்தில் துங்கியவர்கள் தங்கள் உடமையிகை விட்டு வெளியேறி மாற்றி இடங்களில் தச்சம் புகுந்தனர். இரவு நேரத்தில் குடிசைகள் தண்ணீரில் சென்றதால் 10க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் இழுந்து சென்றுக்களாம் என்ற தகவல் வெளியாகிறது. ஒரு பெண் சடலம் உட்பட 3 பேர் மீட்கபட்டுள்ளனர். இதில் திரிசாத் பேகம் (30) அவரது மகள் சகினா பேகம் (6) ஞானம்பாள் (18) அடங்குவர் மேலும் உடல்களை தேடும் பணி நடத்து வருகிறது.  மறுபடியும் வெள்ள அபாயம் இருப்பதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளத்தின் காரணமாக திருப்பூர் மாவட்ட கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் மதிவாணன், மேயர் விசாலாட்சி, எம்.எல்.ஏ. ஆனந்தன், துணை மேயர் குணசேகரன், மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்தனர். மேலும் வெள்ள நீர் வடிய நடவடிக்கை எடுக்கபடுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony