முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவில் 17-வது சார்க் உச்சி மாநாடு மன்மோகன் சிங் பங்கேற்கிறார்

செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,நவ.- 9 - சார்க் 17-வது உச்சி மாநாடு மாலத்தீவில் நாளை ஆரம்பமாகிறது. மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்கிறார். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மன்மோகன் சிங் இன்று புதுடெல்லியில் இருந்து மாலத்தீவு புறப்பட்டு செல்கிறார். மாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகள் தெற்காசியாவில் உள்ளன. இந்த 7 நாடுகளும் சேர்ந்து தங்களுக்குள் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தின. இதற்கு சார்க் அமைப்பு என்று பெயர். இந்த அமைப்பில் பார்வையாளர் நாடாக ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளது. சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சார்க் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 17-வது தடவையாக மாலத்தீவில் உள்ள அட்டு தீவில் நாளை ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் 7 நாடுகளின் பிரதமர்களும் கலந்து கொள்கிறார்கள். நாளை தொடங்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் மற்றும் உயரதிகாரிகள் செல்கிறார்கள். மாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் கிலானி உள்பட இதர நாடுகளின் பிரதமர்களை மன்மோகன் சிங் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு மாலத்தீவு தலைநகரான மாலே தீவுக்கும் மன்மோகன் செல்கிறார். மலே தீவுதான் மாலத்தீவின் தலைநகராகும். இந்தியாவுக்கு பாகிஸ்தான் சிறப்பு அந்தஸ்து கொடுத்திருக்கும் இந்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமரும் மன்மோகன் சிங்கும் சந்தித்து பேசுவதை இதர நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரம் உள்பட இருதரப்பு உறவை மேலும் சீர்படுத்துவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் பூட்டானில் சார்க் உச்சிமாநாடு நடைபெற்றது. அப்போது கிலானியும் மன்மோகன் சிங்கும் சந்தித்து பேசினர். அதன் பின்னர் மொஹாலியில் உலக கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது அதில் கிலானி கலந்துகொண்டு பார்த்தார். அப்போது கிலானியும் மன்மோகன் சிங்கும் சந்தித்து பேசினர். அதன் பின்னர் இருவரும் மாலத்தீவு உச்சி மாநாட்டின்போது சந்தித்து பேசுகிறார்கள். மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதிமுன்பு விரைவாக நிறுத்தும்படி கிலானியை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுகொள்வார் என்று தெரிகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மத்தாய் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இது 17-வது சார்க் மாநாடாக இருந்தாலும் மாலத்தீவில் இந்த மாநாடு 3-வது முறையாக நடைபெறுகிறது. சார்க் அமைப்புகளுக்கிடையே உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக்கொள்ளவும் வரத்தக அதிகரிக்கவும் இருநாடுகளின் மக்களிடையே உறவை சீர்படுத்தவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மாலத்தீவு பாராளுமன்றத்திலும் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்