முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா தலைமையில் - கலெக்டர்கள் காவல் துறை அதிகாரிகள் மாநாடு

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.13- சென்னையில் இன்று கலெக்டர்கல், மாவட்ட காவல் துறை இனர் காணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மாநாடு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறுகிறது. ஜெயலலிதா தலைமையில் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, நாள்தோறும் பல்வேறு  மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, மக்களுக்குப் பயன்படுகின்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதற்கும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வருகின்றன.  இவையன்றி, தனி நபர் வருமானத்தினை பெருக்குவதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டம்​ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட்டு, சட்டத்தின் மாட்சிமை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்காக அரசு தீட்டும் திட்டங்களை மக்களுக்கு சென்று சேர்ப்பதில் முக்கிய பங்காற்றுபவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள். அதே போல் சட்டம் ​ ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றங்களை தடுப்பதிலும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளைப் பெற்றுத் தருவதிலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களும், மாநகரக் காவல் ஆணையர்களும், உயர் காவல் துறை அதிகாரிகளும் பெரும் பங்கு வகிக்கின்றனர்.  அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை திறனாய்வு செய்யும் வகையிலும், உள்ளூர் மக்களின் தேவைக்கேற்ப திட்டங்களில் உரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள சட்டம்​ஒழுங்கு நிலை குறித்து விவாதிக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாடு  முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர், அரசுச் செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். இதன்படி, (13.11.2011) இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஒருங்கிணைந்த மாநாடும், (14.11.2011) நாளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடும், அன்று பிற்பகல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாடும் நடைபெறும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!