முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வு முடிவு

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.17 - எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி.க்கான தனித் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. மார்ச் மாதம் எழுதிய தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தனியாக எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. படித்தவர்கள் இந்த தனித்தேர்வில் பங்கேற்று எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை (18-ந் தேதி) பிற்பகல் அரசு கல்வித்துறை இணைய தளங்களில் வெளியிடப்படுகிறது.
இதற்கான 3 இணைய தள முகவரிகள் வருமாறு:- www.dge1.tn.nic.in, www.dge2.tn.inc.in, www.dge3.tn.nic.in தனித்ததேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ்கலை வருகிற 25 மற்றும் 26-ம் தேதிகளில் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். மறு கூட்டல் விண்ணப்படிவங்கள் வருகிற 24, 25, 26-ம் தேதிகளில் வினியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 26-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மறு கூட்டல் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர், துணை இயக்குனர் அலுவலங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை மண்டலத்தை சேர்ந்தவர்கள் சைதாப்பேட்டை முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், எழும்பூரில் உள்ள சென்னை வடக்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம், எழும்பூரில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம், சூளை மேட்டில் உள்ள சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம், சைதாப்பேட்டையில் இருக்கும் மத்திய சென்னை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் ஆகியவற்றில் 26-ந் தேதிக்குள் மறு கூட்டல் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
இதற்காக டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள சென்னை மண்டல துணை இயக்குனர் அலுவலகம், அரசு தேர்வுகள் இயக்கம் ஆகிய இடங்களுக்கு யாரும் செல்லக் கூடாது. மறு கூட்டலுக்கான கட்டணத்தை அரசு தேர்வுகள் இயக்குனர் பெயரில் டிராப்ட் எடுத்து செலுத்த வேண்டும்.
இந்த தகவலை சென்னை அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony