முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. உறுப்பினர் அ.தி.மு.க.வில் இணைந்தார்

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.19 - தி.மு.க. நரசிங்கபுரம் நகரமன்ற தலைவரும், 6-வது வார்டு தி.மு.க. உறுப்பினருமான காட்டுராஜா என்ற எம்.பழனிச்சாமி தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வின் இணைந்தார். இது குறித்து விபரம் வருமாறு:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை, நேற்று உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேலம் புறநகர் மாவட்டம், நரசிங்கபுரம் நகர மன்றத் தலைவர்  காட்டுராஜா (எ) எம். பழனிச்சாமி, 6​ஆவது வார்டு தி.மு.க. உறுப்பினர் மாலா பாலமுருகன் ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது, சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியும் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!