பாந்த்ரா தீ விபத்துக்கு சதிவேலையே காரணம் - ராஜ்தாக்கரே

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      இந்தியா
raj

மும்பை,மார்ச்.11 - மும்பையில் பாந்த்ரா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சதிவேலையே காரணம் என்று ராஜ்தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள பாந்த்ரா புறநகர் பகுதியில் உள்ள கரீம் நகர் குடிசை பகுதியில் கடந்த வாரம் தீப்பிடித்தது. இதில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் எரிந்து சாம்லாகிப்போய்விட்டது. ஸலம் டாக் மில்லியனரி படத்தில் நடித்து ஆஸ்கர் விருது பெற்ற சிறுமி ரூபினா வீடும் அவர் வாங்கிய ஆஸ்கர் விருதும் எரிந்து சாம்பலாகிப்போய்விட்டது. இந்த தீபத்தில் சதிவேலை நடந்துள்ளது என்று மகாராஷ்டிரா நிர்மான் சமிதி கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார். இந்த தீ விபத்தில் மனிதர்கள் யாரும் சாகவில்லை சில குதிரைகள் மட்டும் இறந்துவிட்டன. இது மும்பை மாநகராட்சிக்கும் மாநில அரசுக்கும் எப்படி தெரியாமல் இருக்கும். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோருக்கு இருக்க வீடுகள் இல்லை. அதசமயத்தில் குடிசை பகுதியில் வசிக்கும் இதர மாநிலத்தவர்களுக்கு இலவச வீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதனால் இந்த தீ விபத்தில் சதி நடந்துள்ளது என்று ராஜ்தாக்கரே தனது கட்சியை தொடங்கி 5-வது ஆண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: