எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.25 - வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் துரைமுருகன் வீடு, உறவினர் வீடுகள், கல்லூரி உட்பட 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கொத்து கொத்தாக சாவிகளும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி விபரம் வருமாறு:-
தி.மு.க.வில் கருணாநிதி, அன்பழகனுக்கு அடுத்து 3-வது இடத்தில் இருப்பவர் துரைமுருகன். கருணாநிதி குடும்ப பிரச்சினைகளில் ஆலோசனை கூறும் அளவுக்கு நெருக்கமானவர். அவர் 1989-ம் ஆண்டு முதல் கருணாநிதி அமைச்சரவையில் தொடர்ந்து அமைச்சராக இருந்து வருபவர். 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், பின்பு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
புதிய தலைமை செயலகம் கட்ட ஆரம்பித்த புதில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் மீது புகார்கள் வந்ததாகவும், அதிக அளவில் கமிஷன் கேட்டு முறையாக அதை மேலிடத்தில் தராமல் வைத்து கொண்டதாகவும், அதனால் அவரை பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து கருணாநிதி கழற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
துரைமுருகன் 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தாக புகார் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புகார் உண்மை என தெரியவந்ததின் பேரில் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
சென்னை கோட்டூர்புரத்தில் துரைமுருகன் வசிக்கும் வீட்டிற்கு நேற்று காலை 6.45 மணிக்கு நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டிலிருந்து துரைமுருகனிடம் காரணத்தை கூறி சோதனை மேற்கொண்டனர். துரைமுருகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிடுவது தெரிந்தவுடன் தி.மு.க.வினர் ஏராளமானோர் வீட்டு முன் திரண்டனர். முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி, முன்னாள் மேயர் மா.சுப்ரமண்யம், ஆர்.எஸ்.பாரதி, வெங்கடபதி ஆகியோர் வந்தனர். பொன்முடி, மா.சுப்ரமண்யம் ஆகியோரை போலீசார் உள்ளே அனுமதித்தனர்.
நேற்று காலை சென்னையில் உள்ள துரைமுருகனின் வீட்டில் சோதனை நடந்த அதே நேரம் துரைமுருகனின் மகன் வீடு, வணிக வளாகம், சகோதரர் வீடு உட்பட 14 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
போலீசாரின் சோதனை மாலை வரை நீடித்தது. இதில் வேலூரில் உள்ள வீட்டில் சோதனையிட்டதில் ஏராளமான ஆவணங்களும், கொத்து சாவிகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் போலீசாரின் சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்களும், சொத்து விபரங்கள் குறித்த கம்ப்யூட்டர் ஆவணங்களும், தஸ்தா வேஜூகளையும் போலீசார் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.துரைமுருகன் மேல் 13 (2), 13 (1) ஆகிய பிரிவிகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடுகளிலும் சோதனை:
முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வீடுகள் தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகளில் லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று காலை 7மணிக்கு லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வீடு தொழிற்சாலை இன்ஜினரிங் கல்லூரி அவரது தம்பி சிங்காரம் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் அதிரடி சோதனை நடத்தினர். வேலூர் காட்பாடி காந்திநகரில் உள்ள அவரது மனைவி சாந்தகுமாரி பெயரில் உள்ள வீட்டுலும் சோதனை நடைபெற்றது. மேலும் துரைமுருகனுக்கு சொந்தமான ஏலகிரி நூற்பாலை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. மினரல் வாட்டர் நிறுவனத்திலும் ஐடிசி குடோனிலும் திவிர சோதனை நடத்தினர். இதை போல காட்பாடியில் உள்ள கிங்ஸடன் இன்ஜீனரிங் கல்லூரிதுரைமுருகன் பண்ணை விடுகளிலும் சோதனை நடைபெற்றது. இச்சோதனை குறித்து லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் கூறியதாவது முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்தாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் மீதும் அவரது மனைவி மற்றும் தம்பி சிங்காரம் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்றதாக தெரிவித்தனர். சோதனையின் போது போதிய அதராங்கள் கிடைத்துள்ளதாகவும் இதன் படி குற்றம் எண்-17/2011 பிரிவு 13(2) ஆர் டபிள்யூ 13(1 )(இ) ஆகிய ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்தனர். மேலும் சோதனையின் போது சென்னை லஞ்ச ஓழிப்பு டி.எஸ்.பி.அல்லிபாஷா வேலூர் டி.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் கொண்ட போலீஸ்சார் சோதனையில் ஈடுப்பட்டனர். இச்சோதனை 4மணி நேரம் நிடித்தது. காட்பாடி துரைமுருகன் வீட்டில் அவரது மனைவி சாந்தகுமாரி அவரது மகன் கதீர்ஆனந்த ஆகியோரிடம் விசாரனை நடத்தினர். இதை தொடர்ந்து சித்தூர் ரோட்டில் உள்ள கிங்ஸ்டன் கல்லூரியில் சோதனை நடைபெற்றது.
ரெய்டு நடைபெற்ற இடங்கள்
1. சென்னை காந்தி மண்டபம் சாலை கோட்டூர் புரத்திலுள்ள துரைமுருகன் வசிக்கும் இல்லம்.
2. வேலூர் ஈஸ்ட் காஸ்ட் ரோடு காந்திநகர் எண்.7-ல் உள்ள துரைமுருகன் சகோதரர் துரைசிங்கத்தின் வீடு.
3. வேலூர் ஈஸ்ட் காஸ்ட் ரோடு காந்திநகரில் எண்.6-ல் உள்ள துரைமுருகனுடைய மனைவியின் பெயரிலுள்ள வீடு.
4. வேலூர் காட்பாடி காந்திநகர் 2-வது பிரதான சாலையில் உள்ள துரைமுருகனின் சகோதரர் துரைசிங்கத்தின் வீடு.
5. வேலூர் காட்பாடி கண்டிப்பேடு கசம் கிராமத்தில் உள்ள துரைமுருகன் குடும்பத்திற்கு சொந்தமான மினரல் வாட்டர் கம்பெனி.
6. வேலூர் காட்பாடி 2-வது பிரதான சாலையில் உள்ள மினரல் வாட்டர் கொடவுன். இது துரைமுருகன் குடும்பத்திற்கு சொந்தமானது.
7. வேலூர் காட்பாடியில் துரைமுருகன் மகன் பெயரில் இயங்கும் ஐ.டி.சி. சிகரெட் கம்பெனி கொடவுன்.
8. வேலூர் காட்பாடி மேட்டுக்குளம் சித்தூர் பிரதான சாலையில் உள்ள கிங்ஸ்டன் இன்ஜினியரிங் காலேஜ் இது துரைமுருகன் பெயரில் உள்ள கல்வி அறக்கட்டளை பெயரில் இயங்குகிறது.
9. ஏலகிரியில் உள்ள துரைமுருகனின் மகன் ஆனந்த் பெயரில் உள்ள காட்டேஜ்.
10. திருப்பத்தூர் ஏலகிரி ஆதனாவூர் மஞ்சு கொல்லை புதூரில் உள்ள ஸ்பின்னிங் மில் காட்டேஜ் (இது கதிர் மில்லுக்கு சொந்தமான காட்டேஜ்).
11. காஞ்சிபுரம் மேல் கோட்டையூர் கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் உள்ள ராஜம்மா எக்ஸ்போர்ட் கம்பெனி.
12. அடையாரில் உள்ள துரை முருகனுக்கு சொந்தமான தேவ் ரெஸிடென்ஸியில் உள்ள 2ஏ, 2சி, 3டி எண்ணுள்ள 3 அபார்மெண்ட் பிளாட்டுகள்.
துரைமுருகனின் சொத்து மதிப்பு:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஜினியரிங் காலேஜ், ஸ்பின்னிங் மில், கோட்டூர்புரத்தின் வீடு, அடையாரில் 3 பிளாட்டுகள், ஏலகிரியில் காட்டேஜ் என்று சொத்து குவித்துள்ள துரைமுருகன் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தனது சொத்துமதிப்பு ரூ.3 கோடியே 39 லட்சம் என்றும், தனக்கு ரூ.1 கோடியே 85 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சொந்தமாக ஒரு கார் கூட அவரிடம் இல்லையாம். ஆனால் 3 விலையுயர்ந்த சொகுசு கார்கள் எப்போதும் துரைமுருகன் வீட்டு வாசல் முன்பு நிற்க்கும்.
துரைமுருகன் 2011 சட்டமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்துப்பட்டியல் தனக்கும் தனது மனைவி பெயரிலும் ரூ.6 கோடியே 20 லட்சம் அசையா சொத்துக்கள் உள்ளது என்றும், தனது தனிப்பட்ட சொத்து ரூ.3 கோடியே 39 லட்சம் அசையா சொத்துக்கள் உள்ளது என்றும் தனது மனைவி பெயரில் ரூ.3 கோடியே 39 லட்சம் அசையா சொத்துகளும், 2 கோடியே 80 லட்சம் அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், மனைவி பெயரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளதாகவும், ரூ.1 கோடியே 85 லட்சம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டூர்புரத்தில் துரைமுருகனின் வசிக்கும் வீடு பலகோடி பெறும் அடையாரில் உள்ள 3 பிளாட்டுகள் பல கோடி பெறும் பஸ்பின்னிங் மில்லும், என்ஜினியரிங் கல்லூரியும் கட்ட எவ்வளவு கோடி செலவாகும் என்று கூறவே வேண்டாம்.
ஆனால் இவைகளை அறக்கட்டளை பெயரில் பதவி செய்து ஊரையும், நாட்டையும் ஏமாற்றி வருகின்றனர்.
படிப்பு செலவுக்கும் காசில்லாமல் எம்.ஜி.ஆர். உதவியால் படித்த துரைமுருகன்:
துரைமுருகன் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சிலர் மூலம் எம்.ஜி.ஆரை அணுகினாராம். அவரது நிலையை கேட்ட எம்.ஜி.ஆர். நன்றாக படி என்று அனுப்பி வைத்தாராம்.
படிக்க செலவுக்கு பணமில்லை என்று எம்.ஜி.ஆரிடம் போய் நின்றபோது துரைமுருகன் சட்டம் பயில எம்.ஜி.ஆர். பண உதவி செய்தாராம். (அதன் பிறகு கட்சியிலும் மாணவர் அணியில் இருந்த துரைமுருகன் தனது மகன் கல்லூரிக்கு செல்லும் மாணவனாக இருக்கும் வரை மாணவரணி நிர்வாகியாக இருந்தது தனிக்கதை.)
எம்.ஜி.ஆர். உதவியால் படித்து ஆளான துரைமுருகன் 1977-ல் எம்.ஜி.ஆர். முதல்வராக வந்தபோது நன்றி மறந்து சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக எம்.ஜி.ஆருக்கு எதிராக அரசியல் பண்ணினார். இதுபோல் ஒருநாள் முதல்வர் எம்.ஜி.ஆர்ரை சட்டசபையில் விமர்சித்உத கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி சட்டசபைக்குள் விழுந்துவிட்டார் துரைமுருகன் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அவரை வளர்த்து படிக்க வைத்த பாசத்தில், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஓடிவந்து துரை முருகனை தூக்கி தாங்கிபிடித்து தண்ணீரை முகத்தில் தெளித்து மயக்கம் தெளிய வைத்து தாயன்புடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் என்பதும், அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த கருணாநிதியும் அப்போது சட்டசபையில் இருந்தார். (மெளனமாக பார்த்துக்கொண்டு) அன்று படிப்பு செலவுக்கே பணமில்லாதவர் இன்று பல கோடிக்கு அதிபதி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-12-2025.
22 Dec 2025 -
வங்காளதேசத்தில் இந்து வாலிபர் படுகொலை சம்பவத்தில் 12 பேர் கைது
22 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூர கொலை மற்றும் உடல் எரிப்பு தொடர்பான வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவ
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்
22 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து தி.மு.க.
-
மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி தங்கம் விலை புதிய உச்சம்
22 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று ஒரேநாளில் 2 முறை உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.100560-க்கும் விற்பனையானது.
-
ஆட்சி மாற்றத்திற்காக வரும் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம்: சரத்குமார் பேட்டி
22 Dec 2025நெல்லை, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக பிரச்சாரம் செய்யபோவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்கள் நீக்கம்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி
22 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய ராணுவத்திற்காக போரிட்ட இந்திய மாணவனை கைது செய்தது உக்ரைன் படை: வீடியோ வெளியீடு
22 Dec 2025கீவ், ரஷ்யாவுக்காக போரிட்ட இந்திய மாணவர் உக்ரைன் படையால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தன்னை
-
10 அம்ச கோரிக்கை தொடர்பாக அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் மூன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
22 Dec 2025சென்னை, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வரும் நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம
-
பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
வீட்டுக்காவலில் வைக்கக்கோரிய மலேசிய முன்னாள் பிரதமரின் நஜீப் கோரிக்கையை நிராகரித்தது கோர்ட்
22 Dec 2025கோலாலம்பூர், சிறையில் உள்ள தன்னை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி நஜீப் ரசாக் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
-
கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ ஜெனரல் பலி
22 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
22 Dec 2025சென்னை, மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
-
பாதுகாப்பு, அமைதியான மாநிலம் தமிழ்நாடு: த.வெ.க. கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் முகமது பேச்சு
22 Dec 2025சென்னை, ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார்.
-
கேரளாவில் தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தடை முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை
22 Dec 2025கேரளா, கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக கேரள முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39 ஆயிரம் விண்ணப்பங்கள் தற்போது வரை வந்துள்ளன: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
22 Dec 2025சென்னை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 39 ஆயிரத்து 821 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும், 413 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் அளிக்கப்பட்டுள்ளதா
-
723 செவிலியர் காலி பணியிடங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
22 Dec 2025சென்னை, தற்போது 723 செவிலியர் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று போராட்ட குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் மா.
-
அ.தி.மு.க. அவைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
22 Dec 2025சென்னை, அ.திமு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
விஜய்யுடன் உள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விமர்சனம்
22 Dec 2025கிருஷ்ணகிரி, விஜய்யுடன் இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
டெல்லியில் காற்று மாசு, பனிமூட்டம்: விமானங்களின் சேவை கடும் பாதிப்பு
22 Dec 2025டெல்லி, டெல்லியில் குளிர்காலம் நிலவி வரும் சூழ்நிலை காற்று மாசு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
-
வரும் 30-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: குமரியில் உள்ள பெருமாள் கோவில்களில் தீவிர ஏற்பாடு
22 Dec 2025கன்னியாகுமரி, கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள வெங்கடாஜலபதி கோவில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று.
-
எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
22 Dec 2025டெல்லி, எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசர அவசரமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.
-
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல அரசியல் தலைவர்களுக்காக தயாராகும் பிரச்சார வாகனங்கள்
22 Dec 2025சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களுக்கு தயாராகும் பல்வேறு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயாராகி வருகின்றன.
-
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நியூசி., பிரதமர் லக்சன் பேச்சு
22 Dec 2025புதுடெல்லி, இந்தியா - நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வா
-
காசாவில் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு
22 Dec 2025டெல் அவிவ், 3 சம்பவங்களிலும் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க, இஸ்ரேல் விமான படை களமிறங்கி, தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தது.
-
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 130 பள்ளிக்குழந்தைகள் மீட்பு
22 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளில் 130 பேரை அதிரடியாக ராணுவம் மீட்டது.


