முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி ஆவணங்கள் மூலம் ரூ.9.73 கோடி வங்கி கடன் மோசடி தொழிலதிபர் கைது

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.- 8 - போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.9.73 கோடி கடன் மோசடி செய்த சென்னை தொழில் அதிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதுகுறித்து சென்னை மாநகர் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- சென்னை ஷெனாய் நகர் புல்லா அவென்யூவில் இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பிராந்திய மேலாளர் ஆர்.ரவீந்திரன் என்பவர் சென்னை காவல் ஆணையாளருக்கு கொடுத்த புகார் மனுவில் சென்னை அடையாறு சாஸ்த்திரி நகர் பகுதியில் இயங்கி வரும் திரிசக்தி பப்ளிக்கேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் லோன் கேட்டு விண்ணப்பித்ததாகவும் அதன்பேரில் ரூ.1.80 கோடி நிலம் வாங்கவும், ரூ.82.50 லட்சம் தொழிற்சாலை கட்டவும், ரூ.6.11 கோடி இயந்திரங்கள் வாங்கவும், ரூ.1 கோடி செயல் மூலதனத்திற்காகவும் ஆக ரூ.9.73 கோடி கடன் வழங்கியதும், இந்த பணத்தை பெற்ற திரிசக்தி பப்ளிக்கேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி மற்றும் அதன் டைரக்டர்களாகிய சுந்தரராமன், அவரது மனைவி நளினி சுந்தரராமன், மகன் மதன்சந்தர் மற்றும் மோசஸ் ஆகியோர் மேற்படி கடன் தொகையை கையாடல் செய்துவிட்டதாகவும்,மேலும் தாங்கள் செய்த விசாரனையில் மிஷினரி லோனாக தாங்கள் சஃபையர் டிரேடர்ஸ் என்ற பெயரில் கொடுத்த ரூ.5.75 கோடிக்கான வரைவு காசோலையை மேற்படி திரிசக்தி பப்ளிக்கேஷன் பிரைவேட் லிமிடெட் கம்பெனி டைரக்டர்கள் போலியான வங்கி கணக்கு துவங்கி கையாடல் செய்துள்ளது தெரியவந்ததாகவும், ஆகவே நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்திருந்தார். மேற்படி புகாரின் பேரில்,சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஜே.கே.திரிபாதி, மற்றும் காவல் கூடுதல் ஆணையாளர் அபய் குமார் சிங் ஆகியோர் உத்திரவின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் எ.ராதிகா, ஆலோசனையின் படி, காவல் உதவி ஆணயாளர் எ.ஜான் ரோஸ் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் கே.விஜயகுமார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில், குற்றவாளிகள் வங்கியிலிருந்து இயந்திரங்கள் கடன் பெற ஆவணங்களை போலியாக தயார் செய்து வங்கிக்கு கொடுத்து ரூ. 5.75 கோடி போலி நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு துவங்கி கடன் தொகையை பணமாக்கி  தாங்கள் நடத்தும் பிற கம்பெனி கணக்குகளுக்கு பணத்தை மாற்றியுள்ளது  தெரியவந்தது, எனவே 6.12.11 அன்று முதலாம் குற்றவாளி திரிசக்தி  பப்ளிக்கேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர்   சுந்தர்ராமன் தலைமை காவலர் பாஸ்கரன் மற்றும் ராஜேந்திரன் அடங்கிய தனிப்படை மூலம் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை 6-வது நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago