அமெரிக்க முன்னாள் கவர்னருக்கு 14 வருட சிறை

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

சிகாகோ, டிச. - 10 - அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தின் முன்னாள் கவர்னர் ராட்பிளாகோசெவிசுக்கு ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஊழல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள 2 வது அமெரிக்க ஆளுனர் இவர்.  இதற்கு முன்னர் ஜார்ஜ்ரியான் என்ற ஆளுனருக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆளுனராக இருந்த போது ஊழல் செய்ததாக செவிஸ் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வகித்த செனட் பதவியை ஏலம் விட்டு அதை பிரச்சார செலவுக்கும், சொந்த நலனுக்கும் பயன்படுத்த முயற்சித்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: