அதிமுக தலைமை கழக பேச்சாளர் முனவர் ஷெரீப் மரணம்:செல்லூர் கே.ராஜுஅஞ்சலி

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,டிச.- 12 - அதிமுக தலைமை கழக பேச்சாளராக பணியாற்றி வந்தவர் மதுரை முனவர் ஷெரீப்(வயது58) இவர்  தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வந்தார். மதுரையில் உள்ள அவரது வீட்டில் அவர் இருந்த போது அவருக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இது குறித்த தகவல் அறிந்த கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விரைந்து வந்து  பேச்சாளர் முனவர் ஷெரீப் உடலுக்கு  மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநில எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் எம்.எஸ்.பாண்டியன், அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன், தெற்கு மண்டல தலைவர் பெ.சாலைமுத்து, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, வடக்கு தொகுதி கழக செயலாளர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் புதூர் அபுதாகீர், வட்ட செயலாளர் வெங்கடாசலம், தலைமை கழக பேச்சாளர்கள் எம்.ஜி.பாண்டி, மதுரை அழகர், கிருபாகரன், பாவலர் ராமச்சந்திரன், முத்தரசு, முன்னாள் மகளிரணி செயலாளர் அன்னம்மாள், முகவை சண்முகம் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: