முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்பட்டியான் திரைப்படத்திற்கு தடை விதிக்க கூடாது

புதன்கிழமை, 14 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச. 14 - மம்பட்டியான் திரைப்படத்திற்குத் தடைவிதிக்கக் கூடாது என்று நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த நல்லப்பன் நடிகர் பிரசாந்த் நடக்கும் மம்பட்டியான் படத்திற்க்கு தடைவிதிக்க கோரி சென்னை நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனவில் கூறியிடுப்பதாவது:

எனது தந்தை பெயர் அய்யாதுரை என்கிற மம்பட்டியான். அவரின் வாழ்க்கையை தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் மம்பட்டியான் என்ற பெயரில் சினிமா படம் தயாரித்துள்ளார். இந்த படம் தயாரிப்பது குறித்து மம்பட்டியான் வாரிசான என்னிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை. படத்தை தயாரிக்க உரிமையையும் என்னிடம் கேட்கப்படவில்லை. எற்கனவே 1983ம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் என்ற படத்தினால் எனது குடும்பத்தினருக்கும், உறவினர்களக்கும் இடையே பகை உணர்வு இருந்து வருகிறது. ஆகவே எனது கருத்தை கேட்காமல் படத்தை வெளியிடக் கூடாது என உத்திரவிட வேண்டும். என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு மம்பட்டியான் படத்தின் தயாரிப்பளர் நடிகர் தியாகராஜன் சார்பில் அவரது வக்கீல் ஆனந்தன் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மலையூர் மம்பட்டியான் படம் 1983-ம் ஆண்டு வெளியானது. அப்பொழுது இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. படத்தின் தயாரிப்பாளர் சிவானந்தத்திடம் - 2008-ல் காப்பிரைட் பெற்று மம்பட்டியான் என்ற பெயரில் படம் தயாரித்துள்ளேன். ஆகவே மனுதாரர் என்னுடைய படத்திற்க்கு தடை கோருவது உள் நோக்கம் கொண்டது. 2009-ல் இருந்து இந்த படத்திற்க்கு விளம்பரம் செய்து வருகிறேன். அப்பொழு தெல்லாம் மனுதாரர் தடை கோராமல் இருந்துள்ளார். மற்றும் மலையூர் மம்பட்டியான் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. இப்பொழுது இதற்கு தடை கோருவது சரியல்ல. ஆகவே மம்பட்டியான் படத்திற்கு தடை கோருவது தவறு. படத்தின் படச்சுருள் அனைத்து வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 16-ந் தேதி படம் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தின் திருட்டு வி.சி.டி. இந்தியாவிற்குள் நுழைய நேரிடும். இதனல் எனக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். நான் பெரும் அளவில் பாதிக்கப்படுவேன்.

எனவே நல்லப்பன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு 8-வது உதவி நகர சிவில் நீதிமன்றத்தின் நீதிபதி வினோபா முன்பு நேற்று விசாரனைக்கு வந்தது, அப்பொழுது நீதிபதி இந்த வழக்கின் விசாறனையை (இன்று) 14-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony