முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் ​கேரளாவில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.27 - கேரளா​தமிழகத்தில் இயல்பு நிலை திரும்ப அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று கருணாநிதியிடம் பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்தார். சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங்கை, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. 12 பேர் கொண்ட குழுவினர் ஆளுநர் இல்லத்தில் நேற்று சந்தித்தனர். குழுவில் கருணாநிதியுடன் அன்பழகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி உட்பட பலர் இருந்தனர். இவர்கள் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக, பிரதமரிடம் மனு ஒன்றை அளித்தனர். முல்லைப் பெரியாறு அணையின் nullர் மட்டத்தை குறைக்கவும், புதிய அணை கட்டவும், கேரளா அரசு எடுத்து வரும் முயற்சிகளை சுட்டிக் காட்டி கருணாநிதி கவலை தெரிவித்தார். 

மேலும் அணையின் பாதுகாப்பு குறித்த கேரள அரசின் தவறான பிரசாரத்தால் இரு மாநிலத்திலும் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை பிரதமரிடம் கருணாநிதி விளக்கி கூறினார். பிரச்சினையை மேலும் வளர விடாமல், உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதை கவனமாக கேட்ட பிரதமர் மன்மோகன்சிங் கேரளா​தமிழக மக்களிடையே நல்லுறவை பேணி காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும். இரு மாநிலத்திலும் இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony