எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச. 27 - சென்னை அருகே உள்ள பழவேற்காடு ஏரியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உறவினர்களோடு பழவேற்காடு ஏரிக்கு சென்ற 21 பேர் படகு விபத்தில் பலியானது நெஞ்சை உருக்கும் செய்தியாகும். பலமான காற்று வீசியதாலும் அளவுக்கு மீறி படகில் பயணிகளை ஏற்றியதாலும் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடக்காமலிருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பழவேற்காடு படகு விபத்தில் 21 பேர் பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் கும்மிடிப்பூண்டி நகர துணை செயலர் பாண்டியனும் உயிரிழந்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |