முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு - தமிழக போலீசாருக்கு சபாஷ்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

காரைக்குடி,டிச.27 - தமிழக,கேரள பிரச்சினைகள் பெரிய அளவில் நடந்தாலும் மத்திய அரசு தமிழகத்தை மாற்றான்தாய் மனப்பாண்மையுடன் பார்த்தாலும் தமிழகத்திற்கு வரக்கூடிய பாரத பிரதமர் மன்மோகன் சிங், எவ்விதமான இடைஞ்சலும் இன்றி திரும்பி செல்ல வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழகத்தின் 19 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த 15 நாட்களாக காரைக்குடியில் முகாமிட்டு காரைக்குடியையே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் வந்திறங்கிய ஹெலிகாப்டர் தளம் முதல் பல்கலைக்கழக அரங்கு வரை ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சிறு அசம்பாவிதங்கள், விபத்துக்கள் கூட நடைபெறாமல் கவனமுடன் நடந்து கொண்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஸ் ஊழல், கடுமையான விலைவாசி உயர்வு, சிதம்பரம் பதவி விலக வலியுறுத்தல், கூடங்குளம் அணுஉலை பிரச்சினை என மத்திய அரசுக்கு இமாலய பிரச்சினைகள் இருந்தபோதிலும் தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டு பிரதமருக்கு பாதுகாப்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 15 நாட்களாக அல்லும் பகலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தற்போதுதான் நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony