முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மோனோ ரெயில் திட்டத்திற்கு புதிய டெண்டர்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.28 - சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல், சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து வசதிக்காக மோனோ ரெயில் கொண்டு வரப்படும் என்று முதல்​ அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 111 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிகளில் மோனோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இவை 16 ஆயிரத்து 600 கோடி செலவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மோனோ ரெயில் திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக அமைக்கப்படும் 4 வழித்தடங்களில் ஒன்றை 2014​ம் ஆண்டுக்குள் நிறைவு செய்து அதில் மோனோ ரெயில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மோனோ ரெயில் திட்டத்துக்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி விட்டன. மோனோ ரெயில் திட்டத்தை அனுபவம் உள்ள நிறுவனங்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மோனோ ரெயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேர்ந்து எடுக்கப்படும் நிறுவனம் உலக அளவில் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று அரசு கருதுகிறது. ஏற்கனவே விடப்பட்ட டெண்டர்கள் திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே உலகின் சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் வகையில் உலகளாவிய புதிய டெண்டர் விடப்படுகிறது. ஒருசில மாதங்களில் இந்த பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மோனோ ரெயில் திட்ட பாதை அமைக்கும் பணி தீவிரம் அடையும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்