Idhayam Matrimony

காந்தி மண்டப திட்ட மதிப்பீடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சென்னை காந்தி மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி , சென்னை காந்தி மண்டபம் மற்றும் தியாகிகள் மணிமண்டபம், மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம் மற்றும் அங்கு அமைந்துள்ள பல்வேறு நினைவிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நேற்று (27.12.2011)  செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி,  முதலாவதாக, கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள கலையரங்கினையும், nullங்காவினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் தியாகிககள் மணிமண்டபத்திலுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களையும், மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் புகைப்படங்களையும்  பார்வையிட்டார்.  தியாகிகள் மணிமண்டபத்தில் 1245 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களும், மொழிப்போர் தியாகிகளின் மணிமண்டபத்தில் 246 மொழிப்போர் தியாகிகளின் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளதாக  அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து அமைச்சர், பக்தவச்சலம் நினைவிடம், இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம், காமராசர் நினைவிடம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.  மண்டபம் மற்றும் நினைவிடங்களை நல்ல முறையில் பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார்.  சிறிய பழுது தானே என்று நினைக்காமல் பழுதுகள் ஏற்பட்ட உடனேயே உடனுக்குடன் அதனை சரிசெய்ய பொதுப்பணித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, புனரமைக்கப்பட      உள்ள  காந்தி மண்டபத்தின் திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடங்களை  செய்தி        மற்றும்      சிறப்பு      திட்ட     செயலாக்கத்துறை         அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பார்வையிட்டு, பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சருடன் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், துணை இயக்குநர் (நினைவகங்கள்) தாணப்பா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கே.ஏ.ராஜசேகரன், உதவி பொறியாளர் அருண்மொழி,  உதவி மின்பொறியாளர் திருமால், சக்தி கோதண்டம்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சேகர், முருகேசன் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago