பகவத் கீதைக்கு தடைவிதிக்க ரஷ்ய கோர்ட்டு மறுப்பு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மாஸ்கோ, டிச.29 - இந்துக்களின் புனித நூலான பகவத்கீதைக்கு தடைவிதிக்க ரஷ்யாவில் உள்ள சைபீரிய கோர்ட்டு மறுத்துவிட்டது.இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் சில குறிப்பிட்ட பகுதிகள் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் இருப்பதாகவும், அதனால் அந்த நூலை சைபீரியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று கோரி சைபீரியாவில் உள்ள ஒரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 28 ம் தேதி வெளியிடப்படும் என்று அந்த கோர்ட்டின் நீதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தார். பகவத் கீதையை தடை செய்யும் முயற்சியை தடுத்து நிறுத்த ரஷ்ய அரசு முன்வர வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பகவத்கீதை ஒரு புனித நூல். மத உணர்வுகளை மதிக்க வேண்டும். அதிலுள்ள கருத்துக்கள் யாரையும் புண்படுத்துவதாக அமையவில்லை. எனவே இந்த நூலை தடைசெய்ய முடியாது என்று சைபீரிய கோர்ட்டு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: