ஜப்பானில் 30 இந்தியர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      இந்தியா
India

புதுடெல்லி, மார்ச் 15 - ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட டானிடா நகரில் சிக்கியிருந்த 30 இந்தியர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜப்பானில் சுமார் 25 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனிடையே சுனாமி தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட டானிடா நகரில் சிக்கியிருந்த 30 இந்தியர்கள் அங்குள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தியா சார்பாக கம்பளிப் போர்வைகள், உடைகள், மருந்து பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக இந்திய  வெளியுறவு செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: