முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுக்கு அ.தி.மு.க. பொதுக்குழு கடும் கண்டனம்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.31 - சென்னை இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாகவும் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசுக்கு அ.தி.மு.க பொதுக் குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. சென்னையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் கூடிய அ.தி.மு.க பொதுக் குழுவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மத்திய அரசைக் கண்டித்து ஜந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ் நாட்டின் நிதி நெருக்கடியை சீர்செய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கக் கோரி, முதலமைச்சர் ஜெயலலிதா, பாரதப் பிரதமரிடம் அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு கண்டனம்!

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு, மாநில அரசின் நிர்வாகத்தையும், பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகத்தையும் சீரழித்து, ஒரு மிகப்பெரிய  நிதி நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. தமிழ்நாட்டின் நிதி நிலையை சீர் செய்யும் நோக்குடனும், பொதுத் துறை நிறுவனங்களை கடன் சுமையில் இருந்து மீட்கும் குறிக்கோளுடனும், வளர்ச்சித் திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் இலக்குடனும், 14.6.2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா, பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து சிறப்பு நிதி உதவி வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், மத்திய அரசோ, இது போன்ற நிதி உதவி வழங்கும் விஷயங்களில், காங்கிரஸ் மற்றும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு சாதகமாகவும், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாதகமாகவும் நடந்து கொள்கிறது. மத்திய அரசின் இத்தகைய பாரபட்சமான நடவடிக்கைகள் கண்டிக்கத் தக்கவை என்பதை இந்தப் பொதுக்குழு பதிவு செய்கிறது.

மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா, 25.12.2011 அன்று சென்னை வந்த பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து, கடந்த திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடு காரணமாக, 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் பற்றாக்குறையும், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையும் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தை சீரமைக்க சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கி உள்ளார்கள்.

​இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா கோரியுள்ள சிறப்பு நிதி உதவியை தமிழ்நாட்டிற்கு உடனடியாக வழங்குமாறும், இதர கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறும், மத்திய அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை உடனடியாக அமல்படுத்தும் வண்ணம் அதனை, அரசிதழில் வெளியிட மத்திய அரசை வலியுறுத்தல்!

காவிரி நதிnullர் பங்கீட்டுப் பிரச்சினையில், காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை 25.6.1991 அன்று வழங்கிய போது முதலமைச்சராக இருந்த கழகப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா, அதனை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டார்கள். அதனையடுத்து நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் 10.12.1991 அன்று வெளியிடப்பட்டது. ஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வெளியிடப்பட்ட போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அதனை மத்திய அரசிதழில் வெளியிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவிரியில் தமிழ் நாட்டின் nullநீர் ஆதார உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், காவிரி நதிnullநீர்ப் பங்கீடு குறித்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடுவது அவசியமாகும். மத்திய அரசோ அத்தகைய அறிவிப்பினை அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா, புதுடெல்லி சென்று பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் அக்கறையற்று உள்ளது. இதிலும் மெத்தனப் போக்கு, காலதாமதம். இது கண்டிக்கத் தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும்; இந்தத் தீர்ப்பினை செயல்படுத்தும் வகையில் கண்காணிப்பு குழுக்களை அமைத்திட வேண்டும் என்று மத்திய அரசை, இந்தப் பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. 

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படுவது காவிரி டெல்டா பகுதி. பெருமழை காலத்தில் பயிர்கள் நீnullரில் மூழ்கி குறுவை முழுவதும் பயனற்றுப் போகும் துயரத்தை இதற்கு முன் பல ஆண்டுகளாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் அனுபவித்து வந்திருக்கிறார்கள். பருவ மழையின் வீச்சையும், வேகத்தையும் கணிக்க முடியாமலும், விதைக்கின்ற காலத்தை

திட்டமிட முடியாமலும், இது நாள் வரை அல்லல்பட்ட காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் இந்த ஆண்டு உரிய நேரத்தில் விதைத்து, நல்ல விளைச்சலைக் கண்டு மழைக்கு முன் அறுவடை செய்தார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா, மேற்கொண்ட ஞானம் மிகுந்த நடவடிக்கை தான் விவசாயிகளின் இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம். பாசனத்திற்கென ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12​ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையிலும், உணவு உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு ஜூன் 6​ஆம் தேதியன்றே மேட்டூர் அணையைத் திறந்து, மழைக்கு முன் குறுவை பயிர் அறுவடை காண முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

குறுவை நெற்பயிரைக் காத்து, டெல்டா விவசாயிகளின் விளைச்சல் அதிகரிக்க பருவத்தே பயிர் செய்யும் வாய்ப்பினை வழங்கிய அ.தி.மு.க பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்தப் பொதுக்குழு தனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட மண்ணெண்ணெயை வழங்காத திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசுக்கு கண்டனம்! 

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் மோசமான நிர்வாகம் காரணமாக, தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க ஓராண்டு காலத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 1,000 மெகாவாட் கூடுதல் மின்சாரத்தை அளிக்குமாறு 14.6.2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா, பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டார்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கோரியவாறு கூடுதலாக 1,000 மெகாவாட் மின்சாரத்தை வழங்காத மத்திய அரசிற்கு இந்தப் பொதுக்குழு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசின் என்.எல்.சி. நிலை​2 விரிவாக்கப் பணிகள் மற்றும் கூடன்குளம் அணுமின் சக்தி நிலையப் பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, வேண்டுகோளினை ஏற்று, கூடுதலாக 1,000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்து உடனடியாக வழங்குமாறு மத்திய அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டிற்கு மாதம் ஒன்றிற்கு வழங்கி வந்த அளவான 65,140 கிலோ லிட்டரை, மத்திய அரசு தொடர்ந்து குறைத்துக் கொண்டே வந்துள்ளது.

தற்போது 44 ஆயிரத்து 580 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே மத்திய அரசால் மாதம் ஒன்றுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தேவைக்கும், விநியோகத்திற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே ஒதுக்கி வழங்கி வந்த 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை வழங்க வலியுறுத்தி, முதலமைச்சர் ஜெயலலிதா நேரிலும், கடிதம் மூலமாகவும் பாரதப் பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும் தமிழ்நாடு

அரசின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான மண்ணெண்ணெயை வழங்காமல் குறைத்துக் கொண்டே வரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, தமிழ்நாட்டிற்கு தேவையான 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை ஒவ்வொரு மாதமும் தவறாமல் அளிக்க வேண்டும் என

மத்திய அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையிலான சட்டத்தை இயற்ற திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசை வலியுறுத்தல்! 

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பெண்களின் சமூக பங்களிப்பின் அவசியத்தை உலகுக்கு உரக்கச் சொன்னது தமிழ்ச் சமுதாயம். பெண் கல்வியிலும், பெண்கள்  முன்னேற்றத்திலும், பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை கொண்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., முதலமைச்சர் ஜெயலலிதா என்ற நீnullண்ட தலைமை வரிசையை கொண்ட nullமி நம் தமிழ் nullமி. இந்தப் புதிய nullமியில் ஊற்றெடுத்த பெண் விடுதலை உணர்வுகள் அனைத்தும் இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டும் ஒளி விளக்குகளாக அமைந்திருக்கின்றன.

1972​ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கிய போது

உருவாக்கப்பட்ட கொள்கை விளக்கத்திலேயே, நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்புகளில் குறைந்தது 25 விழுக்காடு இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு வழங்கவும், கொள்கை வகுக்கும் அமைப்புகளில் மகளிருக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கவும், ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பங்கு பெறவும் வழிவகை செய்யப்பட்டது.

கழகப் பொதுச் செயலாளராக முதலமைச்சர் ஜெயலலிதா, பொறுப்பேற்ற பின்னர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் கழக அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

1991​ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா, முதன் முதலாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது தான், 31 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது தவிர, நியமன உறுப்பினராகவும் ஒரு பெண்ணே நியமிக்கப்பட்டார்.

அதாவது, கிட்டத்தட்ட 15 விழுக்காடு பெண்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு 1991​ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கூட, அ.தி.மு.க. சார்பில் 33 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் பெண்கள் போட்டியிடும் வாய்ப்பினை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி உள்ளார்கள். குறிப்பாக, 10 மாநகராட்சி மேயர் பதவிகளில், 6 மாநகராட்சிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களாகப் போட்டியிட்ட பெண்களே மேயர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். பெண்கள் முன்னேற்றத்தில் கழகப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உள்ள அக்கறையின் வெளிப்பாடே இந்த வெற்றி.

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா தொடக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறார்கள். இந்த மசோதா மாநிலங்கள் அவையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது அதற்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள்

வாக்களித்தனர்.

இந்தச் சூழ்நிலையில், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிருக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும், அதற்கான மசோதா மக்களவையில் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. நீnullண்ட காலமாக நிலுவையில் உள்ள மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என மத்திய அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாகவும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும், திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசுக்கு கண்டனம்!

மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடுவதையும், மாற்றுக் கட்சியினர் ஆட்சி நடத்தும் மாநில அரசுகளை வஞ்சிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. அதிலும் குறிப்பாக, திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசில், திமுக முக்கிய பங்கு வகித்துக் கொண்டு, பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

மாநில அரசுகளை அதிகாரமற்றதாக ஆக்கும் வகையில், வகுப்பு வாரி மற்றும் இலக்கு வன்முறை (நியாயம் மற்றும் இழப்பீடு வழங்க வழிவகை செய்தல்) தடுப்புச் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய முயற்சித்தல்; மாநில அரசுகளின் வரி விதிக்கும் உரிமைகளை பறித்தல்; மருத்துவப் படிப்பிற்கு பொது நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்ய முயற்சி செய்தல்; தமிழ் நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய உணவுப் பாதுகாப்புச் சட்ட முன்வடிவினை அறிமுகப்படுத்துதல்; மாநில அரசின் சட்டமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்ட லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து, நிறைவேற்றி, மாநில அரசுகளின் மீது திணித்தல் போன்ற எதேச்சாதிகார நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதே போன்று, காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் மற்றும்

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்காத மாநில அரசுகள் ஆகியவற்றிற்கு நிதியுதவி வழங்காமல் மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.

மாநிலத்தின் நலன்களை புறக்கணிக்கும் வகையிலும், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு மத்திய அரசை கண்டித்து 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!