முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேல்முருகனின் புதிய கட்சி ஜனவரி 15-ல் உதயமாகிறது

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சிதம்பரம், டிச. 31 - ஜனவரி 15 ம் தேதி தை முதல் நாளான தமிழர் திருநாளன்று ஒரு புதிய கட்சி தொடங்கவுள்ளோம் என்று பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்தார். புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, சென்னையில் முன்னாள் எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் என்னோடு தொடர்பில் உள்ளனர். இவர்களும் புதிய கட்சிக்கு வருவார்கள். முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மின்சாரம் செல்லப்படுவதை நிறுத்தக் கோரி நெய்வேலியில் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏக்கள் சண்முகம், காவேரி, காமராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ராயநல்லூர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!