முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்கூட்டியே தேர்தல் பாகிஸ்தான். மக்கள் கட்சி தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், ஜன. - 8 - பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தி விடலாம் என்பதில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தீவிரமாக உள்ளது.  பாகிஸ்தான் அரசு தனது பதவிக்காலம் முழுவதையும் பூர்த்தி செய்யாது என்று யூகங்கள் வெளியாகி உள்ளன. இதனால் முன்னதாகவே தேர்தல் நடத்துவதற்கு ஆளும் கட்சி தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் கிலானி உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலவைக்கு மார்ச் 11 ம் தேதிக்கு பதில் பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடத்தி விடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மூத்த தலைவர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.  பொதுத் தேர்தலை இந்த ஆண்டே அக்டோபர் 16 ம் தேதி வாக்கில் நடத்தி விடுவது என்றும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு வரை உள்ளது. ஜூன் மாதத்தில் மக்கள் நல பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு உடனடியாக அக்டோபர் மாதத்தில் பொதுத்தேர்தலை நடத்த ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. தற்சமயம் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கடும் நெருக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். ராணுவ புரட்சி ஏற்படுமோ என்று அஞ்சி அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்நோக்கி அவர் கடிதம் அனுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் சர்தாரி மீதான அன்னிய செலவானி மோசடி வழக்குகளை திரும்ப விசாரிக்க முடிவு செய்துள்ளதும் சர்தாரிக்கு நெருக்குதலாக அமைந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்