முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கொள்கைபரப்பு இணைச் செயலாளர் பழ.கருப்பையா-பொறுப்பிலிருந்து விடுவிப்பு

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.- 9 - அ.தி.மு.க கொள்கைபரப்பு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டுள்ளார்.

புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. முருகையா பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.  இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிடுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:- அ.தி.மு.க. கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பழ.கருப்பையா எம்.எல்.ஏ. இன்று (நேற்) முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மேலும் திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.முருகையாபாண்டியன் இன்று (நேற்று) முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில், ஆர்.முருகையா பாண்டியன் (அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) இன்று (நேற்று) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க உடன் பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony