முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய இறையாண்மைக்கு கேரளம் சவால் விடுகிறது: திருமாவளவன்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

தேனி, ஜன. - 9 - முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்க மறுத்து இந்திய இறையாண்மைக்கு கேரளம் சவால் விடுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.  முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட தேனி டிரைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் சின்னமனூரை சேர்ந்த ராமமூர்த்தி ஆகியோரின் வீடுகளுக்கு திருமாவளவன் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய திருமாவளவன்,  கேரள அரசு மற்றும் அரசியல் கட்சியினர் புதிய அணை கட்ட வேண்டும் என்று பிடிவாதத்தில் உள்ளனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்க மறுத்து இந்திய இறையாண்மைக்கு கேரளம் சவால் விடுகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. உயர்நிலை குழு அறிக்கையை திசை திருப்பும் நடவடிக்கையில் கேரளம் ஈடுபட்டுள்ளது. பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது போல் தமிழகத்தில் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பெரியாறு அணை உரிமை மீட்பு போராட்டத்தில் இளைஞர்கள் உயிர் தியாகம் செய்யக்கூடாது என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்