சிட்னி டென்னிஸ்: அடுத்த சுற்றில் அசரென்கா, ஷியாவன்

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, ஜன. 11 - சிட்னியில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான அசரென்கா மற்றும் ஷியாவன் ஆகிய இருவரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த வருடத்தின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி விரைவில் மெல்போர்ன் நகரில் துவங்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை போட்டி அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர். 

அதற்கு முன்னதாக சிட்னியில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆஸி. ஓபன் போட்டிக்கு பயிற்சி ஆட்டமாக கருதப்படும் இந்தப் போட்டியில் முன்னணி வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். 

இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகள் ஒரு பெரும் பட்டத்தைக் கைப்பற்ற முழுத் திறனுடன் ஆடிய போதிலும், கிராண்ட் ஸ்லாம் போட்டியை மனதில் கொண்டு காயம் ஏற்பட்டு விடாமல் எச்சரிக்கையாகவும் ஆடி வருகின்றனர். 

கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வரும் சிட்னி சர்வதேச போட்டிகள் இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறி வருகின்றன. இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து  வருகின்றனர். 

இதில் உலகின் 11 ம் நிலை வீராங்கனையான ஷியாவன் அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் சமந்தாவை 6 - 2, 6 - 4 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். 

இதேபோல முன்னணி வீராங்கனைகளான சீனாவின் லீனா, 3 ம் நிலை வீராங்கனையான விக்டோரியா அசெரன்கா, 8 ம் நிலை வீராங்கனையான பட்ரோலியா ஆகியோரும் தத்தமது போட்டிகளில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: