முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரேஷ் கல்மாடி மீது மேலும் 2 ஊழல் வழக்கு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 22 ​- டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி ஊழல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அவரை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது. 9 மாத சிறைவாசத்திற்கு பிறகு நேற்று முன்தினம் அவர் ஜாமீனில் வெளிவந்தார். 

இதனால் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கல்மாடிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால் தலைவர் பதவியில் இருந்து விலக மறுத்த சுரேஷ் கல்மாடி சங்க நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கப் போவதாக தெரிவித்தார். இந்த நிலையில் கல்மாடி மீது மேலும் 2 ஊழல் வழக்குகளை தொடர சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. அந்த வழக்குகளுக்கு தேவையான முக்கிய ஆவணங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே சேகரித்துள்ளனர். 

காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழுவுக்கு தலைவராக கல்மாடி இருந்த போது தனக்கு வேண்டியவர்களை பணிகளில் நியமித்தார். அவர்களில் பெரும்பாலானோர் பணிக்கு வராமலேயே சம்பளம் பெற்றனர். இதனை தணிக்கை செய்த கணக்கு தணிக்கை துறை கல்மாடி ஊழல் செய்ததை உறுதி செய்தது. மேலும் தடகள மைதானம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றில் கல்மாடி பலகோடி ரூபாய்களை சுருட்டியதும் தெரியவந்தது. சுவிஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எலக்ட்ரானிக் டைம் போர்டு கருவிகள் ஒப்பந்தத்தில் மட்டும் கல்மாடி சுமார் 90 கோடி ரூபாயை ஏப்பம் விட்டுள்ளார். அடுத்தடுத்து வரும் இத்தகைய புகார்களால் கல்மாடிக்கு நெருக்கடி மீண்டும் அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago