முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வளர்ச்சி நிதி: ஜெயலலிதாவிடம் வழங்கினர்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.27 - அ.தி.மு.க. வளர்ச்சி நிதியாக ரூ.6 கோடியே 82 லட்சம் நிதியை முதல்வர் ஜெயலலிதாவிடம் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.  அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று (26.1.2012  வியாழக் கிழமை), தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம் நேரில் சந்தித்து, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 1 கோடியே 6 லட்சம் ரூபாயையும்,

திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், உணவுத் துறை அமைச்சருமான இரா. காமராஜ் நேரில் சந்தித்து, திருவாரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 1 கோடியே 6 லட்சம் ரூபாயையும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து, கோவை புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 1 கோடியே 6 லட்சம் ரூபாயையும்,

விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி நேரில் சந்தித்து, விருதுநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 1 கோடியே 6 லட்சம் ரூபாயையும் வழங்கினார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், ஊரக தொழில் மற்றும் மதிய சத்துணவுத் திட்ட அமைச்சருமான எம்.சி. சம்பத் நேரில் சந்தித்து, கடலூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 52 லட்சம் ரூபாயையும், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளரும், மீன்வளத் துறை அமைச்சருமான கே.ஏ. ஜெயபால் நேரில் சந்தித்து, நாகப்பட்டினம் மாவட்டக் கழகத்தின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 52 லட்சம் ரூபாயையும், ராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொருளாளரும், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சருமான டாக்டர் எஸ். சுந்தரராஜ், ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் கே.சி. ஆணிமுத்து ஆகியோர் நேரில் சந்தித்து, ராமநாதபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 52 லட்சம் ரூபாயையும், தென் சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஜி. செந்தமிழன், எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து, தென் சென்னை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 52 லட்சம் ரூபாயையும், கோவை புறநகர் மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளரும், வேளாண்மைத் துறை அமைச்சருமான செ. தாமோதரன் நேரில் சந்தித்து, ஒன்றியக் கழகத்தின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 50 லட்சம் ரூபாயையும், வழங்கினார். ஆக மொத்தம் கழக வளர்ச்சி நிதியாக 6 கோடியே 82 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேற்கண்ட தகவல்களை அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு