முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். பிரதமர் கிலானி குற்றவாளி: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பிப்.- 14 - பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி கோர்ட்டை அவமதித்துவிட்டார். அவர் குற்றவாளிதான் என்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக அறிவித்துள்ளது.  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று அந்தநாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஆஜரானார். அப்போது நீதிபதி நசீர் உல் முல்க் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கிலானியை குற்றவாளி என்று அறிவித்தது. பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி உள்பட பல தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அந்த நாட்டு அரசு கிடப்பில் போட்டிருந்தது. ஆனால் அந்த வழக்குகள் அனைத்தையும் விசாரணைக்கு எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு அரசுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டது. இதற்கு கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. ஆனால் அரசு இதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த 16 ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் கொடுத்ததுடன் அவரை ஜனவரி 19 ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இதன்படி கிலானி 19 ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது அவர் அனைத்து நாட்டு அதிபர்களுக்கும் அரசியல் சாசன பாதுகாப்பு உண்டு. அதற்கு சர்தாரி விதிவிலக்கல்ல. அதனால்தான் சுவிட்சர்லாந்து வங்கிகளில் ஜர்தாரி வைத்திருப்பதாக கூறப்படும் பணம் குறித்து அந்நாட்டு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவில்லை என்றார். மேலும் தனக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை ரத்து செய்யுமாறு கிலானி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இப்திகார் சவுத்ரி தள்ளுபடி செய்தார். இதன்படி கிலானி நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை கிலானி மறுத்தார். மேலும் குற்றப்பத்திரிகைக்கு பதிலளிக்க வரும் 24 ம் தேதிவரை அவர் அவகாசம் கேட்டார். மேலும் ஜர்தாரிக்கு எதிராக சுவிட்சர்லாந்துக்கு கடிதம் எழுதப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  இதையடுத்து அவரை குற்றவாளி என்று நீதிபதிகள் அறிவித்தனர். மேலும் வரும் 27 ம் தேதிவரை கிலானி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இனி இந்த வழக்கில் கிலானி குற்றவாளியாகத்தான் ஆஜராக முடியும். பாகிஸ்தான் வரலாற்றில் ஒரு பிரதமர் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை. கிலானி மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சிறை தண்டனை கிடைப்பதோடு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் எந்தவித பதவியும் வகிக்க  முடியாது. ஆனால் கிலானிக்கு தண்டனை அளிக்கப்பட்டாலும் அதை ரத்து செய்யும் அதிகாரம் அதிபர் ஜர்தாரிக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago