Idhayam Matrimony

ராசா - கனிமொழி உள்பட 19 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, மே 26 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி கைமாறியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆ. ராசா, கனிமொழி உட்பட 19 பேர் இன்று டெல்லி சி.பி.ஐ கோர்ட்டில் ஆஜராகிறார்கள்.  

மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்த ஆ. ராசா இருந்த போது 2 ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. அப்போது முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ஏலம் விட்டதால் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சி.பி..ஐ வழ

க்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக ஆ. ராசா அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததோடு அவரும் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் 6 மாத கால சிறைவாசத்திற்கு பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். மேலும் இந்த வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளவுக்கு பல்வேறு நிறுவனங்கள் மூலம் கைமாறியது தொடர்பாக மத்திய அமலாக்கப் பிரிவு விசாரணை செய்து வழக்கு பதிவு செய்துள்ளது. 

இந்த வழக்கில் ஆ. ராசா, கனிமொழி, சரத்குமார், தயாளு அம்மாள், ஸ்வான் டெலிகாம், சாகித் பல்வா, வினோத் கோயங்கா, குசேகான் புரூட்ஸ் வெஜிடபிள்ஸ் இயக்குனர்கள் ஆகிப் பல்வா, ராஜீவ் அகர்வால், மும்பை சினிமா பட அதிபர் ஹரீம் மொரானி, கலைஞர் டி.வி. நிர்வாகி அமிர்தம் உட்பட 19 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளளது. மேலும் பல சிறு நிறுவனங்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளளது. கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி இந்த 19 பேர் மீதும் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு சார்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் 2 ஜி ஒதுக்கீடு பெறுவதற்காக ரூ. 214 கோடி கைமாறி இருப்பதாகவும், எனவே பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி ஓ.பி. ஷைனி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த 19 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜராவார்கள் என்று தெரிகிறது. விசாரணை இன்றே தொடங்குமா? அல்லது மறுதேதியில் விசாரணை தொடங்குமா என்பது குறித்து நீதிபதி ஷைனி முடிவு செய்வார். இந்த 19 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு குறைந்தது 3 ஆண்டு தண்டனை கிடைக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago