ஐ.பி.எல். லீக்: இடியாப்ப சிக்கலில் சென்னை சூப்பர் கிங்ஸ்

செவ்வாய்க்கிழமை, 27 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே.28 - சென்னை அணி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஜெயித்தாக வேண்டும் என்ற இடியாப்ப சிக்கலில் மாட்டியுள்ளது. முதலில் குவாலிஃபயர் போட்டியில் தோற்கும் அணியைச் சந்தித்து அதையும் வென்றாக வேண்டும். அப்போதுதான் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் .

ஆரம்பத்திலிருந்து கலக்கி வந்த அந்த அணி இடையில் 3 போட்டிகளில் அடுத்தடுத்துத் தோற்றதால், ரன்ரேட் குறைந்து 2வது இடத்தைப் பறி கொடுத்ததுவிட்டது.

இதனால் முதல் குவாலிஃபயருக்குள் போயிருக்க வேண்டிய சென்னை அணி இப்போது எலிமினேட்டர் பிரிவுக்கு வந்துவிட்டது. இதில் என்ன கஷ்டம் என்றால் இதில் வென்றே ஆக வேண்டும். தோற்றால் பைனல் இல்லை.

எப்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது கடைசிப் போட்டியில் ஹைதராபாத்தை  வென்று 2வது இடத்தைப் பிடித்ததோ அதே போலத்தான் தனது கடைசி லீக் போட்டியில் அதிரடியாகவும், யாரும் எதிர்பாராதவிதமாகவும் விளையாடி பிளே ஆப் போட்டிக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கோரி ஆண்டர்சன் அன்றைய போட்டியில் பின்னி எடுத்து விட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை. அபாரமாக ஆடி அவர் போட்ட 95 ரன்கள்தான் பிளே ஆப் பிரிவுக்குள் மும்பையை நுழைய முடிந்தது.

மும்பை இந்தியன்ஸ்தான் நடப்புச் சாம்பியனாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்த அணியும் இதுவே. ஆனால் இந்தியாவுக்கு வந்த பிறகு சின்சியர் சிகாமணியாக மாறி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று பிளே ஆப்புக்கும் வந்து விட்டது.

சென்னை சூப்பர்கிங்ஸ் ஐபிஎல் அணிகளிலேயே சற்று பலமான அணியாக தொடர்ந்து ஒவ்வொரு தொடரிலும் அசத்தி வரும் அணி என்பதில் யாருக்குமே சந்தேகம் இல்லை. இதற்கு முன்பு நடந்த 6 தொடர்களிலும் சரி, இப்போதைய தொடரிலும் சரி பிரமாதமாக ஆடி வரும் அணிதான் சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஆனால் அவ்வப்போது இடையில் சோர்ந்து போய் சொதப்பி விடுவதால் சில முறை நாம் நஷ்டப்பட்டிருக்கிறோம். சென்னை அணி இதுவரை 2 முறை கோப்பையை வென்றுள்ளது. பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே சாலிடாக உள்ள சில அணிகளில் சென்னையம் ஒன்று.

மும்பையைப் பொறுத்தமட்டில் மைக்கேல் ஹஸ்ஸி, கோரி ஆண்டர்சன், லென்டில் சிம்மன்ஸ் என சில நல்ல வீரர்கள் உள்ளனர். ஆபத்து காலத்தில் கை கொடுக்க அம்பட்டி ராயுடு, ரோஹித் சர்மா உள்ளனர். கீரன் போலார்ட் திடீரென அபாரமான ஆட்டத்தை காண்பிப்பார்.

அதேசமயம், பந்து வீச்சில் மலிங்கா இல்லாமல் சிரமப்படுகிறது மும்பை அணி. பிரவீன் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் கோபால் பரவாயில்லை. ஹர்பஜன் இருக்கிறார்.

சென்னையைப் பொறுத்தமட்டில் பேட்டிங்குக்கு வேயன் ஸ்மித், மெக்கல்லம் அபாயகரமானவர்கள். ஸ்மித் இதுவரை 501 ரன்களைக் குவித்துள்ளார். மெக்கல்லத்தின் பங்கு 380 ஆகும். பாப் டுபிளஸ்ஸிஸ் இருக்கிரார். மோஹித் சர்மா பந்து வீச்சில் கலக்குகிறார். ஜடேஜா இருக்கிறார்.

மும்பையுடன் ஒப்பிடுகையில் சென்னை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் எந்த இடத்திலும் தேங்கி விடாமல் பிரமாதமாக ஆடினால் அட்டகாசமாக இரு போட்டிகளையும் வென்று இறுதிப் போட்டிக்குப் போகும் வாய்ப்பு சென்னைக்கு நன்றாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: