முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரில் காணாமல் போனவர்கள் குறித்து 18,000 புகார்கள்!

சனிக்கிழமை, 7 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜூன் 8 - இலங்கை உள்நாட்டு போரின் போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்க அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவால் ஏற்படுத்தப்பட்ட குழு பொதுமக்களிடம் இருந்து இதுவரையில் சுமார் 18,590 புகார் மனுக்களை பெற்றுள்ளது.

காணாமல் போன பாதுகாப்பு படையினரின் உறவினர்களிடம் இருந்து பெறப்பட்ட 5 ஆயிரம் புகார்களையும் சேர்த்து மொத்தம் 18,590 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று அந்த விசாரணை குழுவின் செயலர் குனதசா கூறினார். ராஜபக்சே அமைத்துள்ள இந்த 3 நபர் குழு கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 3 அமர்வுகளாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெற்றுள்ளது. இதுவரையில் 462 புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கான காலவரையறை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையே 1990 ம்ஆண்டு ஜூன் 10ம் தேதி முதல் 2009ம் ஆண்டு மே 19ம் தேதி வரை நடைபெற்ற போரின் போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago