முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்புப் பண விவகாரத்தில் சட்டச் சிக்கலை எழுப்பும் சுவிஸ்

சனிக்கிழமை, 19 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.20 - சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த விவகாரங்களை அளிப்பதில் அந்நாட்டு அரசு சட்டச் சிக்கலை எழுப்பி வருகிறது. எனவும் அவற்றைப் பெற அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கல் சட்ட விரோதமாக கணக்குகளைத் தொடங்கியுள்ளது குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட துணைக் கேள்விக்கு பதில் அளிக்கையில் அருண் ஜெட்லி இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: சட்ட விரோதமாக சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 700 இந்தியர்களின் பெயர்களை ஃபிரான்ஸ் அரசு இந்தியாவுக்கு அளித்தது. அவர்களின் பெயர்களை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் பெயர் பட்டியலை அந்நாட்டு அரசு அளித்திருந்தது.

இந்நிலையில், ரகசிய வங்கிக் கணக்குகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்து முழு விவரங்களை அளிக்குமாறு சுவிஸ் அரசிடம் கேட்டிருந்தோம். ஆனால், இரு நாடுகளிடையே உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதுபோன்ற தகவல் அளிப்பதிலுள்ள சட்டச் சிக்கல்களை சுவிஸ் அரசு சுட்டிக் காட்டியுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து அவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

தற்போது இந்தியா-சுவிஸர்லாந்து இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தமானது, பழைய வங்கிக் கணக்குகளுக்குப் பொருந்தாது. இனி தொடங்கப்படும் கணக்குகளின் விவரங்களைப் பெற மட்டுமே அந்த ஒப்பந்தம் உதவும். இதன் காரணமாகத்தான், ரகசியக் கணக்குகளில் கருப்புப் பணம் பதுக்கியிருப்பது தொடர்பாக இந்தியா கேட்டுவரும் விவரங்களை அளிக்க அந்நாடு மறறுத்து வருகிறது. சுவிட்ஸர்லாந்தின் சட்டத்துக்குள்பட்டும் இந்தியாவின் நலன் பாதுகாக்கப்படும் விதத்திலும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும்.

கருப்புப் பணம் தொடர்பான விவரங்களைப் பெறுவதற்கு இந்தியா அனைத்துவிதமான முயற்சிகளையும் எடுக்கும். இது குறித்த ஆதாரங்களைத் திரட்ட மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. முன்னதாக, லீக்டென்ஸ்டடைன் வங்கியிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ரகசியக் கணக்கு வைத்திருந்த இந்தியர்களை அடையாளம் கானும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அவர்கள் மீது வருமான வரித் துறையினரின் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அருண் ஜெட்லி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony