பாக்., போராட்டம்: இம்ரான்கான் மதகுருவுடன் பேச்சுவார்த்தை

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக.19 - பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் முறைகேடு செய்து ஆட்சியை பிடித்ததாக பிரதமர் நவாஸ் செரீஃப் மீது எதிர்க்கட்சி தலைவர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, அவர் பதவிவிலக வலியுறுத்தி லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு 350 கி.மீ. தூரம் பேரணி நடத்தினார்.

மற்றொரு எதிர்க்கட்சி தலைவர் மதகுரு தகிருல் கத்ரியும் தனது ஆதரவாளர்களுடன் இது போன்ற பேரணி நடத்தினார்.இருவரின் பேரணியும் இஸ்லாமாபாத்தில் நுழைந்து முகாமிட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவித்து இருப்பதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நவாஷ் செரீஃப் பிரதமர் பதவியை ராஜினாமா ஒத்துழையாமை போராட்டம் நடத்த போவதாக இம்ரான்கான் அறிவித்தார். அரசுக்கு பொதுமக்கல் வரி செலுத்த கூடாது. மேலும் பொருட்களை பில் எதுவும் இன்றி வாங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். அவரது போராட்ட ம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் நவாஷ் செரீஃப் அரசு பணிந்துள்ளது. உள்துறை மந்திரி சவுத்ரி நசீர் அலி கான் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி எதிர்க்கட்சி தலைவர்களான இம்ரான்கான், தகிருல் கத்ரி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். அதற்காக தனிதனியாக 2 குழுக்கல் அமைக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: