முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை முறைப்படுத்த அவசர சட்டம்

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக்.22 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், 214 சுரங்க ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை அடுத்து, அந்த சுரங்கங்களைக் கையகப்படுத்தி, சுரங்க ஒதுக்கீடுகளை முறைப்படுத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் கையகப் படுத்தப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் நான்கு மாதங்களுக்குள் மறு ஒதுக்கீடு செய்யப்படும். புதிய சுரங்கக் கொள்கையால் பொதுத்துறை நிறுவனமான ‘கோல் இந்தியா’வுக்கு பாதிப்புகள் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு புகாரை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 1993-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட சுரங்க ஒதுக்கீடுகளை சட்ட விரோதம் என அறிவித்தது. மொத்தம் வழங்கப்பட்ட 218 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் 214 ஒதுக்கீடுகளை ரத்து செய்தது. இதனால், அந்த சுரங்கங்களை மறு ஒதுக்கீடு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனிடையே இப்பிரச்சினை தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை முறைப்படுத்த அவசர சட்டம் பிறப்பிக்க, குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியின் ஆலோசனையுடன், அவசர சட்டத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் வரைவு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தால் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட சுரங்கங்கள் அவசர சட்டத்தின் மூலம் கையகப்படுத்தப்படும்.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டதால் மின்சாரம், இரும்பு மற்றும் சிமென்ட் உள்ளிட்ட தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நிலக்கரி உபரியாக இருந்த போதும், இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. சுரங்கங்களை மறு ஒதுக்கீடு செய்ய அவசர சட்டம் கொண்டு வரப்படும்.

மறு ஒதுக்கீடு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் நிறைவடையும். அவசர சட்டத்தின் மூலம் புதிய ஒதுக்கீடுகளில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!