முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை கனிமொழி கண்டிப்பாக ஆஜராக நீதிபதி உத்தரவு

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, நவ.18 - கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி பணம் சட்டவிரோதமாக கைமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவின் வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் நாளை முதல் தினமும் விசாரணை நடைபெறும் என்பதால் கனிமொழி உள்ளிட்டோர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு பிரதிபலனாக ரூ.214 கோடியை பல்வேறு நிறுவனங்கள் மூலம் கலைஞர் டிவிக்கு அளித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து வாங்கிய பணத்தை கடனாக கணக்கு காட்டி கலைஞர் டிவி திருப்பி அளித்தது.

இந்தப் பணப்பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றுள்ளது என்பது அமலாக்கப் பிரிவின் வழக்கு. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, ராஜ்யசபா திமுக எம்.பி. கனிமொழி, தயாளு அம்மாள், ஸ்வான் நிறுவனத்தின் ஷாகித் பல்வா உட்பட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்களின் நிர்வாகிகள் என 19 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இக்குற்றப்பத்திரிகையை ஏற்று அக்டோபர் மாதம் குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி ஓ.பி. சைனி பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த முறை விசாரணையின் கனிமொழி உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கனிமொழியின் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இதனால் கனிமொழிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பிக்க இருப்பதாக நீதிபதி சைனி அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பதறியடித்துக் கொண்டு நீதிமன்றத்துக்கு வந்த கனிமொழியின் வழக்கறிஞர் மன்னிப்பு கோரியதால் பிடிவாரண்ட் பிறப்பிப்பதை ரத்து செய்தார் நீதிபதி. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நடைபெற்றது.

இன்றைய விசாரணையின் போது அமலாக்கப் பிரிவு கூடுதல் இயக்குநர் முதல் நபராக சாட்சியமளித்தார். அவர் தமது சாட்சியத்தின் போது, ஸ்பெக்ட்ரம் மூல வழக்கில் சிபிஐ துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனடிப்படையில்தான் இந்த வழக்கு தொடரப்பட்டது. கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி சட்டவிரோதமாக, அன்னிய செலாவணி சட்டங்களை மீறி கைமாறியதற்கான முழு ஆதாரங்கள் அமலாக்கப் பிரிவிடம் இருக்கிறது என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனரா? என்று நீதிபதி சைனி கேட்டார். அப்போது ஆ. ராசா மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி சைனி, நாளை மறுநாள் முதல் இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடைபெறும். கனிமொழி உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார். இதன் பின்னர் வழக்கின் விசாரணை நாளை மறுநாள் நடைபெறும் என்று நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குற்றம்சாட்டப்பட்டோரின் வழக்கறிஞர்களில் ஒருவரான விஜய் அகர்வால், நவம்பர் 19-ந் தேதி முதல் இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்று கூறினார்.

இவ்வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நேரில் ஆஜராக ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் தயாளு அம்மாள் தவிர 18 பேரும் நாளை மறுநாள் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago