முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்படும்: டெல்லியில் சி.வி.சண்முகம் பேட்டி

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      இந்தியா      அரசியல்
C V Shanmugam 2022 12 24

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்படும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் என அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து டெல்லியில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்படும். நல்ல நோக்கத்திற்காக சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

விரைவில் பொதுக்குழுவை கூட்டுவதற்கான அறிவிப்பை அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன் வெளியிடுவார். இருதரப்பும் கையெழுத்து போடுவது சாத்தியமில்லாதது. அ.தி.மு.க.வில் பெரும்பாலான உறுப்பினர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபரே வேட்பாளராக இருப்பர். அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு என்பது இடைத்தேர்தலுக்கு மட்டுமான உத்தரவு என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பத்தில் இருவரும் கையெழுத்திடுவது நடக்காத காரியம் என வாதிட்டோம். அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழு முடிவெடுக்கட்டும் என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். வேட்பாளே தேர்வு குறித்து பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை கடிதம் மூலம் பெற உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து