முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் ஐ.பி.எல். போட்டி: உ.பி.வாரியர்ஸ் 3 - வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      விளையாட்டு
Women s-IPL 2023 03 20

Source: provided

மும்பை : நடப்பு மகளிர் ஐ.பி.எல். போட்டியில் உ.பி.வாரியர்ஸ் குஜராத்தை வீழ்த்தி 3 - வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றியது.

தலா 2 முறை... 

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும். இதுவரை நடைபெற்றுள்ள ஆட்டங்களை பொறுத்தவரையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

178 ரன்கள் குவிப்பு...

இந்நிலையில் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் குஜராத்-உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஹேமலதா மற்றும் கார்ட்னெர் ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 178 ரன்கள் குவித்தது. இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவிகா வைதியா மற்றும் அலிசா ஹீலி ஆகியோர் களம் புகுந்தனர். இதில் வைதியா 7 ரன்னிலும், அலிசா ஹீலி 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் புகுந்த கிரண் நவ்கிரே 4 ரன்னில் வீழ்ந்தார்.

57 ரன்னில் வீழ்ந்தார்...

இதையடுத்து களம் இறங்கிய தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் அடித்திருந்த நிலையில் 57 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து களம் இறங்கிய தீப்தி ஷர்மா 6 ரன்னில் வீழ்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹாரிஸ் 72 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் அந்த அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. தற்போது 3வது அணியாக உ.பி.வாரியர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து