முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தொடராக வந்த டால்ஸ்டாயின் நாவல் பாதியில் நிறுத்தப்பட்டது ஏன் தெரியுமா?

உலக புகழ் பெற்ற நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய். அவரது போரும் அமைதியும், அன்னா கரீனா போன்ற நாவல்கள் உலக புகழ் பெற்றவை. அவரது மிக சிறந்த நாவலான அன்னா கரீனா 800க்கும் அதிகமான பக்கங்களை கொண்டவையாகும். அந்த நாவல் தொடக்கத்தில் ரஷ்யன் மெசஞ்சர் என்ற இதழில் தொடர் கதையாகவே வந்தது. அவரது அரசியல் கருத்துகளுடன் பத்திரிக்கை ஆசிரியருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் அது முழு வடிவில் புத்தகமாக வெளிவந்தது.

சங்கடத்தில் பேஸ்புக்

சட்டத்திற்கு எதிராக மற்றொரு நிறுவனத்தின் விஆர் (விர்சுவல் ரியாலிட்டி)எனப்படும் மெய் நிகர் தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 50 கோடி டாலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிரினங்களில் கருத்தரிக்கும் ஆண் உயிரி எது தெரியுமா?

உயிரினங்களில் பெரும்பாலும் அனைத்துமே பெண் இனமே கருத்தரிக்கின்றன. ஆனால் ஒன்றே ஒன்றை தவிர. அது கடல் குதிரை. இது ஒருவகை மீன் இனமாகும். கடல் குதிரைகள், பச்சோந்தியைப் போல நிறம் மாறும் தன்மை கொண்டவை. ஆனால் இவை தன்னுடைய ஜோடியைக் கவர்வதற்காக மட்டுமே தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன. ஆண், பெண் என இரண்டு கடல் குதிரைகளுமே தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளும். கடல் குதிரையில் ஆண்தான் தன்னுடைய குஞ்சுகளை பொரிக்கும். பெண் கடல் குதிரை, ஒரே நேரத்தில் 200 முட்டைகள் வரை, ஆண் கடல் குதிரையின் கருப்பை மீது இடும். அந்த முட்டைகள் மீது, ஆண் கடல் குதிரை தன்னுடைய விந்தணுவை தெளித்து இனப்பெருக்கம் செய்கின்றன. இதற்காக ஆண் கடல் குதிரையின் வாலின் கீழ் பகுதியில் ஒரு பை இருக்கும். சுமார் 50 முதல் 100 குஞ்சுகளே பொரிந்து முழுமையாக வெளிவருகின்றன.

ஒரு லிட்டர் பால் ரூ.10 ஆயிரம் கேட்டால் அசந்து போவீர்கள்

ஒரு லிட்டர் பால் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால் கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா.. ஆனால் அது தான் உண்மை. ஆனால் பால் மட்டும் பசும் பால் அல்ல.. கழுதையின் பால். அதுவும் விற்கப்படுவது இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில். அம் மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி என்ற இடத்தில் தான் இந்த வியாபாரம் சக்கை போடு போடுகிறது. கழுதைப் பாலை வாங்குவதற்காக கூட்டம் அலை மோதுகிறது. கொரோனாவுக்கு பிறகு உலகம் முழுவதும் இது போன்ற பல்வேறு மாற்றங்கள் நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்றாக கழுதைப் பால் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். எனவே இதையடுத்து தற்போது கழுதைப் பாலுக்கு அங்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெறும் ஒரு ஸ்பூன் பால் ரூ.100 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1 லிட்டர் கழுதைப் பால் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இது குறித்து டாக்டர் ரோட்ஜே கூறுகையில், கழுதைப் பாலால் கொரோனா போன்ற தொற்றுகள் குணமாவதில்லை. இது மக்களின் தவறான நம்பிக்கை உடல் நலம் பாதித்தால் டாக்டரிடம் சென்று சோதித்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து காசை இவ்வாறு வீணாக வாரி இறைக்கக் கூடாது என்றார். எது எப்படியோ இதன் மூலம் கழுதைக்கும் அதன் பாலுக்கும் புது மவுசு கிடைத்துள்ளது.

முதன் முறையாக

உலகில் முதன்முறையாக கிங்ஸ்டனில் உள்ள டோனர் எனும் பொம்மை நிறுவனம் திருநங்கை வடிவிலான பொம்மைகளைத் தயாரித்துள்ளது. திருநங்கையான ஜாஸ் ஜென்னிங்ஸை மாடலாக வைத்து இந்த பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் திருநங்கைகள் குறித்த நேர்மறை எண்ணங்கள் மக்களிடம் ஏற்படுமாம்,

உலகிலேயே விலை உயர்ந்த மாம்பழம்

மத்திய பிரதேசத்தில் உலகின் அதிக விலை உயர்ந்த மாம்பழம் (Miyazaki Mango) கிடைக்கிறது. ஒரு கிலோ 2.70லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூரைச் சேர்ந்தவர் சங்கல்ப் பரிஹார். இவரது மனைவி ராணி. இவர்கள் தங்களுடைய தோட்டத்தில் மாம்பழ கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வந்துள்ளனர்.  அதில் ஒரு மாமரக்கன்று ஜப்பானின் மியாசாகி மாம்பழங்களுக்கு சொந்தமானது. உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களில் ஒன்றாக அறியப்படும், ஜப்பானின் மியாசாகி மாம்பழங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன, அவை தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை விட அதிக அதிக விலைக்கு விற்பனையாகிறது. இந்த மியாசாகி மாம்பழத்தின் விலை கிலோ 2.7 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago