முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பறவைகளைப்போல வலசை செல்லும் விலங்குகள் எது தெரியுமா?

பருவ காலத்தின் போது இனப்பெருக்கத்துக்காகவோ, இரை தேடியோ பறவைகள் கண்டம் விட்டு கண்டம் செல்வதை வலசைக்கு போதல் என்று குறிப்பிடுகின்றனர். அதென்ன பறவைகள் மட்டும்தான் வலசை செல்லுமா, விலங்குகள், பூச்சிகள் செல்வதில்லையா என்று கேட்டால்... ஆம்.. அவற்றிலும் சில இது போல வலசை செல்கின்றன. சில பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆகியவை இரை மற்றும் இனப் பெருக்கத்துக்காக வாழக்கூடிய சூழலை நோக்கி இடம்பெயர்கின்றன. அலாஸ்கா கரிபு மான்கள், மெக்சிகோ மோனார்க் வண்ணத்துப்பூச்சிகள், ஆப்பிரிக்கத் தட்டான்பூச்சிகள், ஆப்பிரிக்க எருதுகள், சாம்பல் வண்ணத் திமிங்கிலங்கள் போன்றவை மிக நீண்ட தூரத்துக்கு வலசை செல்கின்றன.

2 ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம்

இன்றைக்கு பல இடங்களிலும் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் அலுத்துக் கொள்கிறார்கள். தெரு வியாபாரிகள் சிலர் வாங்கக் கூட மறுத்து விடுகின்றனர். புரளி உண்மையை விட வேகமாக பரவுகிறது. இந்நிலையில் 2 ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. பழைய 2 ரூபாய் நாணயம் இருந்தால் விரைவில் லட்சாதிபதியாகி விடலாம். இது தொடர்பாக வெளியான செய்தி ஒன்றில் ஓஎல்எக்ஸ் தளத்தில் பழைய 2 ரூபாய் நாணயங்களை, பழங்கால பொருள்கள் சேகரிக்கும் நபர்கள் வாங்குவதாக விளம்பரங்கள் வந்துள்ளன. எனவே இவற்றின் மதிப்பு ரூ. 5லட்சம் வரை கிடைக்குமாம். அதிலும் 1994, 1995, 1997, 2000 அச்சிடப்பட்ட நாணயங்களுக்கு அதிக கிராக்கி. இணையதளத்துக்கு சென்று முறைப்படி பதிவு செய்து வழிமுறைகளை பின்பற்றினால் நல்ல விலைக்கு இவற்றை விற்கலாம் என்கின்றன ஊடக செய்திகள்.

சாதனைக்கு தடை

கியூபா நாட்டைச் சேர்ந்தவர் ஃபெலிக்ஸ் குய்ரோலா. இவர், 24.6 அடி உயரம் கொண்ட சைக்கிள் ஒன்றில் பயணம் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சித்தார். இந்த சாதனை நிகழ்த்துவதற்கு அவர் முறையான அனுமதி பெறததால் அவரது சாதனைக் கனவை நிறைவேற்றாமல் போயிற்று.

சந்திரசேகருக்கு டூடுல்...

நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும்போது இறந்த நட்சத்திரங்களாகி அதாவது கருங்குழிகளாக (பிளாக் ஹோல்)மாறுகின்றன என்று கூறியவர் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர். இவர்தான், கருங்குழி என்ற ஒன்று ‌உள்ளது என்று நிரூபித்தவர். இவரின் 107-வது‌ பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.

எச்சரிக்கை

சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வந்தால். சிறுநீரில் புரதம் கலந்து வெளியாகிறதன் அறிகுறியாகும். காய்ச்சல், நீர்வறட்சி, உடல்நல குறைபாடு போன்றவை உண்டாகும் போது சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறி வரும். மஞ்சள் காமாலை அதிகரித்து இருப்பதை சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளிப்பட்டு காட்டிக் கொடுக்கும்.

புதிய சிகிச்சை

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, வயதானவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவது குறித்த சோதனை முயற்சியை மேற்கொண்டது. வயதானவர்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றுவதுதான் அந்த முயற்சி. வயதானவர்கள், உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் முடிவுகள் நல்லவிதமாக வந்துள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago