முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் கோடிகளை குவிக்கும் இளைஞர்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரைச் சேர்ந்த மோகித் சுரிவால். வயது வெறும் 17க்கும் கீழே. ஆனால் இவரது ஆண்டு வருவாய் கோடிக்கும் மேலே. அதுவும் ஒரு சில ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது. இவர் செய்தது என்ன...இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ போன்ற சமூக வலைத்தளங்களில் நமது இளசுகள் சும்மா கடலை வறுக்கும் நேரத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டார் மோகித். உலகத்தின் அனைத்து பிராண்டுளின் கன்டென்டுகளையும் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் ஹிட்டாக்கினார். ஒரு கட்டத்தில் அவரது வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் மனம் தளராமல் பல்வேறு பெயர்களில் இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ, யூடியூப் என கலக்கி வருகிறார். தற்போது அவரது காட்டில் பண மழை கொட்டி வருகிறது.

வந்திருச்சு புதுசு

எவர்லாஸ்ட் நோட்புக் மூலம் எழுதுவதை டிஜிட்டலாக சேமிக்க வசதி வந்தாச்சு. இந்த நோட்புக்கில், எழுதலாம், பதிவு செய்து வைக்கலாம். கூடுதலாக, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றிலும் பகிரலாம். க்ளவுட் முறையில் கூகுள் ட்ரைவ் உள்ளிட்டவற்றில் கோப்புகளை சேமிக்கவும் வசதியுண்டு.

பாலின் மகிமை

ஜூன் 1-ம் தேதி உலக பால் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பசுக்களின் பாலை மனிதன் அருந்தி வந்துள்ளான்.  உலகின் பால் தேவையை 90 சதவீதம் பூர்த்தி செய்யக் கூடியவை பசுக்களே. ஒரு பசுமாடு தன் ஆயுள் காலத்தில் 2 லட்சம் டம்ளர் பால் தரும். பண்ணை மாடுகளே உலகின் 90 சதவீத பால் தேவையை பூர்த்தி செய்கின்றன.

தலையணை சண்டை

உலகம் முழுவதும் சர்வதேச தலையணை சண்டை தினம் ஏப்ரல் 1-ல் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க், ஹாங்காங், இத்தாலி, கனடா போன்ற பல நாடுகளில்சர்வதேச தலையணை சண்டை தினம் முட்டாள்கள் தினந்தன்று ஒரு வேடிக்கை விளையாட்டாக கொண்டாடபடுகிறது.

புது முயற்சி

பலமுறை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பால்கான் 9 என்ற ராக்கெட் விண்ணுக்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்திருக்கிறது. உரிய மாற்றங்களைச் செய்து இதை மீண்டும் பயன்படுத்த முடியும். இந்த வகையில் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியிருப்பது, வரலாற்றில் இதுவே முதன் முறை.

வலிமை ஆக்கும்

சுகா ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால், தேகம், மனம், பிராணன், புலன்கள் சோர்வடையாது. உடலின் கீழ் பகுதியும், இடுப்பும் நரம்புகளும் பலப்படுத்தப்படும். முதுகுத்தண்டும் பலப்படுத்தப்படுகிறது. சுகாசனத்தால், தியானத்தில் மனம் ஒருமைப்படும். சஞ்சலம் அடையாது. பூஜை, தியானம், போஜனம்  ஆகிய சந்தர்ப்பங்களில் இந்த ஆசனத்தை செய்யலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago