முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகை ஆளும் ரோபோ

சீனா, மனிதர்களை போன்ற உருவம் கொண்ட ரோபோவை தயாரித்து அதை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த மனித ரோபோ பெண் வடிவில் உள்ளதால் இதற்கு 'ஜியா ஜியா' என பெயரிடப்பட்டுள்ளது. இது மனிதர்கள் போலவே முகபாவனைகளை மாற்றும் திறன் கொண்டது. இதற்கு செயற்கை அறிவுத்திறன் வழங்கப்பட்டுள்ளது.ஜியா ஜியா- வை சீனாவில் உள்ள ரெஸ்டாரன்ட்டுகள், நர்சிங் ஹோம், மருத்துவமனை வேலைகளுக்கும் வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, கேள்விகளுக்கு, ஏற்ப பதிலளிக்கும். சொன்ன வேலைகளை துரிதமாக செய்யுமாம்.

மிதக்கும் தபால் நிலையம்

உலகிலேயே மிதக்கும் தபால் நிலையம் எங்கிருக்கு தெரியுமா.. அது வேறு எங்கும் இல்லை. இந்தியாவில்தான். அதுவும் குளுகுளு காஷ்மீரில். ஸ்ரீ நகரில் உள்ள தால் ஏரியில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிதக்கும் தபால் அலுவலகம் திறக்கப்பட்டது.  அப்போதைய முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சச்சின் பைலட் ஆகியோரால்தொடங்கப்பட்டது. படகு ஒன்றில் தான் இந்த அலுவலகம் செயல்படுகிறது. ஏரியில் மிதந்தபடியே உள்ளூர் மக்களுக்கான தபால் சேவைகளை செய்து வருகிறது.   உலகளவில் இந்தியாவில் தான் அதிக தபால் அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் சுமார் 1,55,015 தபால் அலுவலகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

ஆனந்த கண்ணீர்

பிரபலமான எமோஜி எது என்று கண்டுபிடிக்க, உலகம் முழுவதும் உள்ள 212 நாடுகளைச் சேர்ந்த 40 லட்சம் ஸ்மார்ட்போன்களில் உள்ள 427 மில்லியன் குறுஞ்செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், ஆனந்த கண்ணீருடன் இருக்கும் முகம் போன்ற எமோஜி உலகில் அதிகம் பேர் பயன்படுத்திய பாப்புலரான எமோஜியாகத் தேர்வு செய்யப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில்....

பூமியை போன்று விவசாயம் செய்வதற்கு ஏற்ற தகவமைப்புகள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக கூறும் நாசா விஞ்ஞானிகள் அங்கு விவசாயம் செய்வதன் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர். பசுமைகுடில் தொழில்நுட்பம் மூலம் விண்வெளி வீரர்கள் தங்கிருக்கும் அறைகளில் விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சிறந்த நகரம்

உலகளவில், சிறந்த நகரங்கள் குறித்த ஆய்வில் ஆஸ்ட்ரிய தலைநகர் வியன்னா சிறந்த நகராக தேர்வாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கூர் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மோசமான சூழல் உள்ள நகரமாக பாக்தாத் உள்ளது. ஆசியாவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம்.

நிம்மதி பெருமூச்சு

தற்போதைய சூழ்நிலையில், பெண்கள் தனியாக அமெரிக்காவுக்குப் பயணம் செய்யும் சூழலில், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா, ஜனவரி 18-ம் தேதி முதல் விமானங்களில் "எக்கனாமி வகுப்பில் 3-வது வரிசையிலிருக்கும் 6 இருக்கைகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago