முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செல்ல பிராணிகள்

நாய்கள் மனித உடலில் உள்ள கரிம சேர்மங்களின் (organic compounds) வாசனையை வைத்து மனித உடல் சரியாக வேலை செய்யவில்லை என கண்டுபிடிக்கும் சக்தி உள்ளது என ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.உண்மையில் நாய்களுக்கு மனிதனின் புற்று நோயை கண்டறிய முடியும். அத்துடன் விஞ்ஞானிகள் நாய்களை வைத்து நீரிழிவு மற்றும் வலிப்பு நோய்களையும் கண்டறிய முடியுமா என முயற்சி மேற்கொண்டுள்ளனர். இரு ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால் மனிதர்களுக்கு கைரேகை போல் நாய்க்கு மூக்கில் உள்ள ரேகை ஒவ்வொரு நாய்க்கும் வித்தியாசமாக இருக்கும். மனிதர்களை போலவே நாய்களும் கனவு காணும்.

43 நாடுகளில் மன்னராட்சி

ஜனநாயகம், சோஷலிசம், கம்யூனிசம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன யுகத்தில் உலகில் சில நாடுகள் இன்னும் மன்னராட்சியின் கீழ் தான் உள்ளன. அவ்வாறு உலகில் மொத்தம் 43 நாடுகள் இன்றைக்கும் மன்னராட்சியின் கீழ் உள்ளன. அவற்றில் ஜப்பான், ஸ்பெயின், சுவிஸ், பூடான், தாய்லாந்து, மொனாகோ, சுவீடன், நெதர்லாந்து உள்ளிட்ட 43 நாடுகளை உலகில் உள்ள 28 அரச குடும்பங்கள்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்றால் ஆச்சரியம் தானே..

நிலக்கடலை பட்டரில் இருந்து வைரம் தயாரிக்கலாம் தெரியுமா?

பூமியின் கீழ் மட்டத்தில் உள்ள அழுத்தம் குறித்த மாதிரிகளை ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கி பரிசோதித்தனர். அப்போது பூமியின் கீழே 2,900 கிமீ ஆழத்தில் வளிமண்டலத்தை காட்டிலும் 1.3 மில்லியன் மடங்கு அதிக அழுத்தம் உருவாக்க முடியும் என கண்டறியப்பட்டது. அது மட்டுமின்றி இதன் மூலம் வைரங்களை உருவாக்குவதற்கான புதிய வழிகளும் தெரிய வந்தன. அறிவியல் கோட்பாட்டின்படி அதிகமான அழுத்தத்தில் கார்பன் அணுக்கள் வைரங்களாகின்றன. இந்த சோதனையின் போது நிலக்கடலை பட்டர் (வெண்ணெய்யை) பரிசோதித்த போது அதிலிருந்தும் வைரம் தயாரிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

ஆண்டுதோறும் 7.5 செமீ நகரும் ஹவாய் தீவுகள்

புவியியல் படித்தவர்களுக்கும், கொஞ்சம் பொது அறிவு படைத்தவர்களுக்கும் இந்த கண்டங்கள் எவ்வாறு உருவாகின என தெரிந்திருக்கும். அவை மெல்ல மெல்ல நகர்ந்து ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும், ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தும் கண்டங்களும் தீவுகளும் உருவாகின. உருவாகி வருகின்றன. இது புவியியலின் இயற்கை. இதில் பசிபிக் கண்டத்திட்டில் அமைந்துள்ள ஹவாய் தீவுகள் ஆண்டுதோறும் நகர்ந்து வருகின்றன. அவை வடமேற்காக நகர்ந்து அமெரிக்க கண்டத்திட்டில் அமைந்துள்ள அலாஸ்காவை நோக்கி நகர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆண்டு தோறும் சுமார் 7.5 செமீ தூரம் நெருங்கி வருவதும் தெரியவந்துள்ளது. கண்டங்கள் பிரிவதும், இணைவதும் பல லட்ச ஆண்டுகள் செயல்பாடு என்றாலும் நகர்வது என்பது ஆச்சரியம் தானே..

பூண்டின் மருத்துவ பலன்

வறுத்த 6 பூண்டுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தப்படும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களை கட்டுப்படுத்தும். உடலில் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கும்.

சிறப்பாக செயல்பட...

அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் ஒருவரால் 1046 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு செல்வதற்கு முன்பும், பள்ளியில் படிக்கும் போதும் குழந்தைகளை அதிக நேரம் தூங்க வைக்க வேண்டுமாம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago