முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்

கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி, கட்டிட ஒப்பந்ததாரர். தனது வீட்டில் கிட்டியம்மாள் என்ற பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த நாய் போட்ட 6 குட்டிகளை அவர் தனது நண்பர்களுக்கு கொடுத்து விட்டார். இதற்கிடையே, தென்காசி அருகே உள்ள மேலப்பாவூரில் உள்ள பெருமாள்சாமியின் மூத்த மகள் இலக்கியா வீட்டில் உள்ள ஆடு ஒன்று, 4 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டியை இலக்கியா, தனது தந்தை பெருமாள்சாமியிடம் கொடுத்துள்ளார். கருப்பாயி என்ற பெயருடன் அந்த ஆட்டுக்குட்டி அவரது வீட்டில் வளர்ந்து வருகிறது. அந்த ஆட்டுக்குட்டி வீட்டிற்கு வந்தது முதல், நாயும் பாசத்துடன் பழகியுள்ளது. ஆட்டுக்குட்டிக்கு பசி எடுக்கும் போதெல்லாம், நாய் பாசத்துடன் பால் கொடுத்து வருவதைப் பார்த்த பெருமாள்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியதால் அந்த காட்சியை அந்த பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

குட்டி திகில் கதை, Little horror story

மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர் எழுதிய மிக சிறிய திகில் கதை   "உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்து இருந்தான். கதவு தட்டப்பட்டது."

பெற்றோர் கவனம்

தனது குழந்தையின் மோசமான புகைப்படங்களை பேஸ்புக்-ல் பதிவு செய்யும் பெற்றோர்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் சிறை தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்குமாறு ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. மீறி பகிர்ந்தால் அவர்களுக்கு 35,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படுமாம்.

இப்படியும் ஒரு ஆய்வு

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 5,208 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், ஃபேஸ்புக்கில் சுயவிவரங்களை அடிக்கடி மாற்றுபவர்கள் மற்றும் அதில் அதிக நேரம் செலவழிப்பவர்கள், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கவலையில் இருப்பவர்களாம். இவர்கள் தான் ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

வியாழனை விட 10 மடங்கு மிகப் பெரிய கோள்

சூரிய மண்டலத்தில் நமக்கு தெரிந்து 9 கோள்கள் உள்ளன. ஆனால் அதையும் தாண்டி பால்வெளி மண்டலத்துக்குள் சென்றால் எண்ணற்ற கோள்களும், நட்சத்திரங்களும் கோடி கணக்கில் கொட்டி கிடக்கின்றன. இயற்கையின் முடிவற்ற ஆச்சரியங்களில் ஒன்றாக பிரபஞ்சம் எப்போதும் திகழ்ந்து வருகிறது. அதற்கு சாட்சியாக தற்போது வியாழனை விட மிகப் பெரிய கோளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கோள் பூமியிலிருந்து 325 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாம். இது வியாழனை விட 10 மடங்கு பெரியது, இதன் எடை ஏறக்குறைய 10 சூரியன்களுக்கு சமம் என்கின்றனர். இது தொடர்பான விஞ்ஞான தகவல்கள் நேச்சர் இதழிலும் வெளியாகி உள்ளன. “b Cen (AB)b" என பெயரிடப்பட்டுள்ள இந்த கோள் தனிப்பட்ட சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறென்ன பிரபஞ்சத்தின் ஆச்சரியங்கள் விரிவடைந்து கொண்டே போகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

மின்னல் மனிதனுக்கு முதுகெலும்பு பாதிப்பு இருந்தது தெரியுமா?

உலகின் மின்னல் மனிதன் என்று அழைக்கப்படுபவர் உசைன் போல்ட்.  அதிவேக ஓட்டக்காரரரான இவரது உச்சபட்ச ஓட்ட வேகம் மணிக்கு சுமார் 44 கிமீ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இவருக்கு scoliosis முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளது. இது குறித்து இவரே ஒரு பேட்டியில் எனது முதுகெலும்பு கடுமையாக வளைந்துள்ளது. இதனால் ஏற்படும் அவஸ்தைகளை நான் பொருட்படுத்துவதில்லை. அதை மீறியே கடுமையாக உழைக்கிறேன் என்கிறார். வெற்றி யாருக்கும் சும்மா கிடைப்பதில்லை என்பதற்கு உசைன் போல்ட் போன்றவர்கள் மிகச் சிறந்த உதாரணம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago