முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒரு லிட்டர் பால் ரூ.10 ஆயிரம் கேட்டால் அசந்து போவீர்கள்

ஒரு லிட்டர் பால் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால் கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா.. ஆனால் அது தான் உண்மை. ஆனால் பால் மட்டும் பசும் பால் அல்ல.. கழுதையின் பால். அதுவும் விற்கப்படுவது இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில். அம் மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி என்ற இடத்தில் தான் இந்த வியாபாரம் சக்கை போடு போடுகிறது. கழுதைப் பாலை வாங்குவதற்காக கூட்டம் அலை மோதுகிறது. கொரோனாவுக்கு பிறகு உலகம் முழுவதும் இது போன்ற பல்வேறு மாற்றங்கள் நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்றாக கழுதைப் பால் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். எனவே இதையடுத்து தற்போது கழுதைப் பாலுக்கு அங்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெறும் ஒரு ஸ்பூன் பால் ரூ.100 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1 லிட்டர் கழுதைப் பால் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இது குறித்து டாக்டர் ரோட்ஜே கூறுகையில், கழுதைப் பாலால் கொரோனா போன்ற தொற்றுகள் குணமாவதில்லை. இது மக்களின் தவறான நம்பிக்கை உடல் நலம் பாதித்தால் டாக்டரிடம் சென்று சோதித்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து காசை இவ்வாறு வீணாக வாரி இறைக்கக் கூடாது என்றார். எது எப்படியோ இதன் மூலம் கழுதைக்கும் அதன் பாலுக்கும் புது மவுசு கிடைத்துள்ளது.

தேனின் மகத்துவம்

நல்ல தேனை கண்டுப்பிடிக்க, ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விடவும். தண்ணீரில் அது கரைந்தால், அது கலப்படம் செய்யப்பட்டது. அதேபோல், சுத்தமான காட்டன் துணியை தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பிக்கும் போது சுடர்விட்டு எரிந்தால் அது சுத்தமானது.

ஆடம்பரத்தின் உச்சம்

இந்தோனேஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி மன்னர் சல்மானுக்காக, சொகுசு கார் உட்பட இவருக்கு தேவையான 460 டன் சாதனங்கள்  சவுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இவர் விமானத்தில் இருந்து இறங்க, தங்கத்தால் ஆன நகரும் படிகட்டு பயன்படுத்தப்பட்டதுதான் ஆச்சரியத்தின் உச்சகட்டம்.

தமிழனின் துரதிஷ்டம்

14 வயதிலேயே மின்னஞ்சல் சிஸ்டத்தை உருவாக்கி பிரமிக்க வைத்தவர் அமெரிக்காவாழ் தமிழர் சிவா அய்யாதுரை. இவருக்கு ஆகஸ்ட் 30,1982-ல் அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சலை கண்டுப்பிடித்தவர் என காப்புரிமை அளித்தும் மாடர்ன் வரலாற்றில் இவர் பெயர் இடம் பெறாமல் போனது வேதனைக்குரியது.

அதிகம் உற்பத்தி

உலக கம்பளி உற்பத்தியில் 2 சதவீதம் இந்தியாவில்  உற்பத்தியாகிறது.ராஜஸ்தான், ஜெய்சால்மர் நகரத்தில்தான் இந்தியாவில் கம்பளி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, கோடைகாலத்தில் உடலை வருத்தி எடுக்கும் கடும் வெயிலும், குளிர்காலத்தில்  உடலை துளைத்தெடுக்கும் கடும் பனிக்காற்றும் வீசும்.

வெப்பமான மார்ச்

உலகில் 6 ஆயிரத்து 300 இடங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்க‌ளின் அடிப்படையில், கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2-வது மாதமாக க‌டந்த மார்ச் மாதம் நாசாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ‌2016ம் ஆண்டு மார்ச்சில் அதிக வெப்பம் பதிவாகியிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago