முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புற்றுநோயை கண்டுபிடிக்க ...

உயிர் கொல்லி நோயான புற்று நோய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 9 கோடியே 5 லட்சம் பேர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகினர். புற்று நோயை மிக எளிதான பரிசோதனை மூலம் கண்டறியும் முறையாக, சீன விஞ்ஞானிகள் ஒரு துளி ரத்தம் மூலம் புற்று நோயை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர். மனித உடலில் புற்று நோய் இருப்பதை ‘ஹீட் ஷாக் புரோட்டீன்’ (எச்.எஸ்.பி.’) எனப்படும் எச்.எஸ்.பி.90ஏ புரோட்டீன் மூலம் கண்டுபிடிக்க முடியும். இது மனித உடலில் இருந்து எடுக்கப்பட்டு பின்னர் அதை ரத்தத்துடன் கலந்து பரிசோதிக்கப்படுகிறது. தற்போது இது சீனா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மூலம் விஞ்ஞானிகளின் 24 ஆண்டு கால ஆய்வு வெற்றி பெற்றுள்ளது.

இதுதான் காரணம்

பெண்களை விட ஆண்களுக்கு அதிகமான தொப்பை வரக் காரணம், அதிக பணிச்சுமையால், ஆண்களுக்கு அதிகப்படியான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள். இதனால் அவர்களின் உடலில் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு தொப்பைக்கு வழிவகுக்கிறது. மேலும், அதிகமாக பீர் குடிப்பதாலும், அதிக நேரம், உட்கார்ந்தவாறே வேலை செய்வதாலும் ஏற்படுகிறது.

இப்படியும் சிலர்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரூ.6000 கோடி மதிப்புடைய ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்யாம் தோலாக்கியாவின் மகன் ஒருவர் ஒரு மாதம் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். செகந்திராபாத்தில் 100 ரூபாய் வாடகை அறையில் தங்கிய அவர் காலணி கடைகளில் பணியாற்றியும், ரிக்ஷா தொழிலாளிகளுடன் தங்கியும் இந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

குழந்தைக்கு எமன்

15 நிமிடங்களுக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான சிந்தனை படைப்புகள் தற்காலிகமாக குறைவதாக, 3 வயதுடைய 60 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகின் முதல் ஸ்டெனாகிராஃபர்

சர் ஐசக் பிட்மன் என்னும் ஆங்கில எழுத்தாளர் 1837ஆம் ஆண்டில் தற்போது பழக்கத்தில் உள்ள ஸ்டெனோகிராபி எனப்படும் புதிய வகைச் சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார். இவரது கோட்பாட்டின்படி 26 ஆங்கில எழுத்துகளும் சிறு சிறு கோடுகள், வட்டங்கள் மற்றும் புள்ளிகள் என மாற்றி எழுதப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் கோடுகள் போடப்பட்ட தாள்களில் மட்டுமே எழுதப்பட்டன.ஜான் ராபர்ட் கிரெக் என்பவர் 1888ஆம் ஆண்டு இந்த முறையை மேம்படுத்தினார். முதலில் இச்சுருக்கெழுத்து முறை ஆங்கில மொழிக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது; காலப் போக்கில் இம்முறை பிற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. சிசேரோ (Cicero), செனெகா (Seneca) போன்ற கிரேக்க தத்துவ அறிஞர்களின் "Tenets and Lectures" என்ற சொற்பொழிவை மெர்கஸ் தெரோ (Mercus Thero) என்பவர் முதன் முதலாக சிறு சிறு அமைப்புகளில் எழுதினார் எனக் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய சுருக்கெழுத்து முறை 19ஆம் நூற்றாண்டில்தான்  வளர்ச்சியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் வாங்க மனைவியை ரூ.1.8 லட்சத்துக்கு விற்றவர்

ஒடிசா மாநிலம் ராய்ப்பூர் பாலங்கீரியை சேர்ந்தவர்  17 வயது சிறுவன். இவருக்கு  கடந்த ஜூலை மாதம்  அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை திருமணம் செய்து வைத்தனர். ஆகஸ்ட் மாதம் தம்பதியினர் ராய்பூர் மற்றும் ஜான்சி வழியாக ராஜஸ்தானுக்கு செங்கல் சூளை வேலைக்குச் சென்றனர்.  அங்கு தங்கிய  சில நாட்களில்,  தனது மனைவியை ரூ.1.8 லட்சத்திற்கு பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது முதியவருக்கு சிறுவன்   விற்றுள்ளார்.  மனைவியை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து உள்ளார். பிறகு  ஒரு ஸ்மார்ட் போனும் வாங்கி உள்ளார். பின்னர் அவர் தனது சொந்த ஊர் திரும்பி உள்ளார். ஊர் திரும்பியவரிடம்  மனைவியை எங்கே என குடும்பத்தினர் கேட்டபோது, அவர்   தன்னை விட்டு விட்டு வேறு ஒருவருடன்  ஓடி விட்டதாக கூறி உள்ளார்.  இதில் சந்தேகமடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸாரின் விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. தற்போது சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார் அந்த சிறுவன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!