உலகையே அழிக்க வந்த நாசகார அரக்கன் பிளாஸ்டிக் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆகவே பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.அதே வேளையில் பிளாஸ்டிக் மாற்றாக காகித பைகள் சூழலை பாதிப்பதில்லை என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் இது நம்பிக்கை இல்லை மூட நம்பிக்கை என விளாசுகிறார்கள் விஞ்ஞானிகள். பிளாஸ்டிக் பைகளை போலவே காகித பைகளும் சுற்று சூழலுக்கு அச்சுறுத்தலானவை. காகித தயாரிப்பின் போது 75 சதவீத சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என ஆய்வுகள் சொல்கின்றன. காகித தயாரிப்பின் போது 80 சதவீதத்துக்கும் அதிகமான பசுமையை பாதிக்கும் வாயுக்கள் வெளியாவதாகவும், நீர் மாசுபாடு ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் ஏராளமான எரிசக்தி ஆற்றலையும் இவை செலவிடுகின்றன. ஆகவே எது சிறப்பு என்றால் நம்மூர் மஞ்சப்பை அல்லது சணல்பை. இனி சாக்கு பையை கேவலமாக பார்க்காதீர்கள் மக்களே..
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
மூளையில் அடினோசின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. காபி குடிக்கும்போது அதில் உள்ள கெஃபைன், அடினோசின் ஆதிக்கத்தைக் குறைப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 250 மி.கிராம் கெஃபைன் உட்கொள்வது நல்லது. அதாவது நாள் ஒன்றுக்கு 2 தடவை மட்டும் காபி அருந்தினால் நல்லதாம்.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் செய்தி தாள் எது தெரியுமா.. பெங்கால் கெசட் என்பதுதான். ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரால் 1780 இல் தொடங்கப்பட்டது. பெங்கால் கெசட் ஒரு வார பத்திரிக்கையாக கொல்கட்டாவிலிருந்து வெளியிடப்பட்டது. இதன் முகப்பில் பிரிட்டன் ஆங்கிலத்தில் செய்திகள் இடம் பெற்றிருந்தன. இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் ஆங்கிலத்தில் நேரடியாக தங்களது கருத்துகளை ஆங்கிலத்தில் சுதந்திரமாக எழுதுவதற்கு இடம் அளித்தது. இதன் கடைசி பக்கங்களில் விளம்பரங்களும் இடம் பெற்றிருந்ததை காண முடிகிறது.
அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் ஒருவரால் 1046 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு செல்வதற்கு முன்பும், பள்ளியில் படிக்கும் போதும் குழந்தைகளை அதிக நேரம் தூங்க வைக்க வேண்டுமாம்
உலகிலேயே மிகவும் உயரமான பனி சிகரமான எவரெஸ்ட் வேகமாக உருகி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் கடந்த 25 வருடங்களில் அந்த பனிப்பாறை இதுவரை 54 மீட்டர் வரையில் அகலத்தில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த பனிப்பாறை கடல் மட்டத்திலிருந்து 25 ஆயிரத்து 938 அடி உயரத்தில் உள்ளது. இது பனியாக மாறிய நேரத்தை காட்டிலும் 80 மடங்கு வேகமாக உருகி வருகிறது. இதற்கு பருவநிலை மாற்றமும் வேகமான காற்றும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. சுமார் 2000 வருடங்களாக உருவான பனிப்பாறைகள் 1990ஆம் ஆண்டிலிருந்து உருகத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இமாலய மலைத்தொடர்களை நம்பி சுமார் பல கோடி மக்கள் உள்ளனர். இவர்கள் குடிநீருக்கு இந்த மலைத்தொடர்களைதான் சார்ந்துள்ளனர். எனவே இந்த மலைத்தொடரில் உள்ள பனிப் பாறைகள் அனைத்தும் உருக தொடங்கினால் மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் நீர் இல்லாமல் போய்விடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும், நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். மேலும் உடல் சூட்டை தவிர்க்க இது பெரிதும் உதவும். பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் நீங்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


