முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கிளிகளைப் போல மிமிக்ரி செய்யும் பேபி சீல்கள்

தங்களது குரல்களை நேரத்துக்கு தக்கபடி மாற்றிக் கொள்ளும் பாலூட்டி விலங்கினங்களில் சீல்களும் ஒன்று. இவை பனி படர்ந்த துருவ பிரதேசங்களில் வாழ்பவை. அண்மையில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் குட்டி சீல்கள் தங்களது குரல்களை மாற்றிக் கொண்டு மனிதர்களைப் போலவும், கிளிகளைப் போலவும் சத்தம் எழுப்புவதை கண்டறிந்துள்ளனர். அவை தங்களது ஒரிஜினல் குரலை மாற்றி, மனிதர்களைப் போல, கிளிகளைப் போல மிமிக்ரி செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். தங்களது குரல்களை ஏற்ற இறக்கத்துடன் மாற்றத் தெரிந்த பாலூட்டி இனங்களில் சீல்களும் தற்போது இணைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். நெதர்லாந்தில் உள்ள Max Planck Institute for Psycholinguistics என்ற ஆய்வகம்தான் தற்போது இந்த ஆய்வை கண்டறிந்துள்ளது. இதற்காக 1 முதல் 3 வாரங்கள் வரையிலான வயதுடைய 8 பேபி சீல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அதன் குரல்களை தொடர்ந்து பதிவு செய்து ஆய்வு செய்ததில் இவை தெரியவந்துள்ளது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்டுள்ள Wadden Sea பகுதியில்தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மனிதர்களுக்கு நீல நிறக்கண்கள் எப்போது தோன்றின?

உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கும் நீல நிற கண்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். உள்ளூர் வழக்கில் இதை நாம் பூனைக் கண் என்று குறிப்பிடுவோம். சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் மனிதர்களுக்கு பொதுவாக அடர் பழுப்பு நிற கண்களே காணப்பட்டன. கருங்கடல் பகுதியில் உள்ள மனிதர்களிடம் மரபணுவில் ஏற்பட்ட ஒரு சிறிய மாற்றம் காரணமாக அடர் பழுப்பு நிறத்திலிருந்து நீல நிறக் கண்கள் உருவாகின. இது பின்னர் படிப்படியாக பல்வேறு பிரதேசங்களுக்கும் பரவின. தற்போது உலக மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பேர் பூனை கண் எனப்படும் நீல நிற கண்களுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வினோத பெயர் கொண்ட சிறுவன்

நம்மூர் பெயர்களை வெளிநாடுகளில் கேட்டால் அவர்களால் உச்சரிக்க முடியாது. அதே போலவே ஆங்கில, ரஷ்ய, போலந்து, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் பெயரை கேட்டால் நமது வாயில் கூட நுழையாது. எவ்வாறு இருந்தாலும் அவை அந்தந்த பிராந்தியங்களில் வழக்கமான பெயர்களாக அறியப்படுவதால் வித்தியாசமாக கருதப்படுவதில்லை. அதே நேரத்தில் பெயர் வித்தியாசமாக இருந்தால்.. நம்மூரில் யாராவது அஆஇஈ என பெயர் வைப்பார்களா.. வைப்பார்கள் என்கின்றனர் இந்தோனேஷியர்கள். அங்குள்ள தெற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள ஒரு சிறுவன் தனது விநோத பெயரால் பிரபலமாகியுள்ளான். அவன் பெயர் என்ன என்கிறீர்களா..ABCDEFGHIJK  என்ற ZUZU என்பதுதான் அந்த பெயர். கொரோனா தடுப்பூசி போட வந்ததன் மூலம் அவன் பெயர்  வெளியில் பரவி நெட்டில் வைரலாகியுள்ளான் அந்த சிறுவன்.

டாடா ஏர்லைன்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா

தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது. அது அனைவருக்கும் தெரிந்த செய்தி.. தெரியாத செய்தி என்ன தெரியுமா.. இந்தியாவில் முதன் முதலில் விமான  போக்குவரத்தை இயக்கியது டாடா தான். அதன் நிறுவனர் Jehangir Ratanji Dadabhoy (JRD) Tata 1932 இல் அதை நிறுவனார். அப்போது அது டாடா ஏர்லைன்ஸ் என அழைக்கப்பட்டது. டாடா ஏர்லைன்ஸ் அப்போது உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே இயக்கி வந்தது. பின்னர் 1946 ஆல் அது ஏர் இந்தியாவாக மாற்றப்பட்டது. அப்போது அது 'மகாராஜா; சின்னத்தை கொண்டதாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. 1948 இல், ஏர் இந்தியா நிறுவனம் ஐரோப்பாவுக்கு விமான சேவைகளை தொடங்கியது. தனியார்-பொது துறை பங்களிப்புடன் சர்வதேச சேவைகள் இயக்கப்பட்டன. அரசு வசம் 49 சதம் பங்குகளும், டாடா வசம் 25 சதவீத பங்குகளும் இருந்தன. 1953 இல் எர் இந்தியாவை முழுக்க தேசியமயமாக்கி நேரு அறிவித்தார். இதற்கு டாடா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பின்னர் ஏர் இந்தியா விமானம் டாடா வசமே திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி கிரகத்தில் வைர மழை

ஜோதிடத்திலும், மக்கள் பேச்சு வழக்கிலும் சனிக்கு நல்ல பெயர் கிடையாது. மக்கள் வாயில் அதிகமாக வசைபாடப்படும் ஒரு கிரகம் சனி. ஆனால் அறிவியலில் ஆச்சரியம் மிகுந்தது மட்டுமல்ல, மிகுந்த வளம் மிக்கதும் கூட. அண்மையில் வெளியான ஆய்வில் வெளிவந்த உண்மையை கேட்டால் அப்படியே ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பீர்கள்... ஆம், நாம் அன்றாடம் வசை பாடும் சனி கிரகத்தில் ஆண்டுதோறும் வைர மழை பொழியுமாம்.. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், சனி, யுரேனஸ், நெப்டியூன் கிரகங்களில் காணப்படும் அதிக அழுத்தம் காரணமாக கார்பன் அணுக்கள் அப்படியே படிகங்களாக மாறி விடுமாம். கார்பன் அணு படிகம் என்பது வைரமன்றி வேறில்லை என்பது விபரமறிந்தவர்களுக்கு தெரியும்.  இதை ஒரு குட்டி ஆய்வகத்தில் வைத்து பரிசோதித்தும் பார்த்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சனி கிரகத்தில் அழுத்ததில் ஏற்படும் மாற்றம் காரணமாக இது போல எக்கச்சக்கமான வைர மழை பொழியுமாம். அதாவது சுமார் 2.2 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமானவை அவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

வைட்டமின் பி12

வைட்டமின் பி12 சத்துக் குறைபாடு, தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு காரணம். மேலும், பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது. பரம்பரையின் காரணமாகவும் நரை ஏற்படுவது உண்டு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago