பூமியின் உள்மையப்பகுதியில் நடத்திய ஆய்வில், 85 சதவீதம் இரும்பு, 10 சதவீதம் நிக்கல், எஞ்சிய 5 சதவீதம் சிலிக்கான் உள்ளதாம். மேலும், இந்த ஆய்வில் 4500 ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்திருக்கும் என்று அறியமுடியுமாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகில் மிக உயரமான சிலை எங்கிருக்கிறது தெரியுமா.. இந்தியாவில்தான். குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைதான் உலகிலேயே மிக உயரமான சிலையாகும். 182 மீட்டர் அதாவது 597 அடி உயரம் கொண்ட இந்த சிலை சீனாவில் உள்ள புத்தர் சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஆகியவற்றை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது. 2 ஆவதாக சீனாவில் உள்ள ஸ்பிரிங் கோயிலில் உள்ள புத்தர் சிலை 128 மீட்டர் உயரமும், 3 ஆவதாக சீனாவில் நன்சானில் உள்ள 108 மீட்டர் உயரம் கொண்ட மற்றொரு புத்தர் சிலையும் 3 ஆவது இடத்தில் உள்ளது. இதில் அமெரிக்காவின் 93 மீட்டர் உயரம் கொண்ட சுதந்திர தேவி சிலைக்கு 4 ஆவது இடமே கிடைத்துள்ளது.
ரத்தத்தில் உள்ள “ஹீமோகுளோபின்” என்ற வேதிப்பொருள் தான் அதற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. உடலுக்கு ஆக்ஸிசனை கொடுப்பதும் அதுதான். ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம். சிவப்பணுக்கள் காணப்படும். அவை உற்பத்தியாகும் இடம் இதயமல்ல; எலும்பு மஜ்ஜையில்தான் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன. சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். வெள்ளை அணுக்களே நோய் எதிர்ப்புச்சக்தியின் முக்கிய ஆதாரம். ரத்த கசிவை தடுப்பவை பிளேட்லட் அணுக்கள். ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மிலி ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் மற்ற அணுக்கள் 10 சதவீதமும் இருக்கும். உடலில் ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா... ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர்! பைக்கின் சராசரி வேகத்தை விட சற்று அதிகம்.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..
பிரபலமான எமோஜி எது என்று கண்டுபிடிக்க, உலகம் முழுவதும் உள்ள 212 நாடுகளைச் சேர்ந்த 40 லட்சம் ஸ்மார்ட்போன்களில் உள்ள 427 மில்லியன் குறுஞ்செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், ஆனந்த கண்ணீருடன் இருக்கும் முகம் போன்ற எமோஜி உலகில் அதிகம் பேர் பயன்படுத்திய பாப்புலரான எமோஜியாகத் தேர்வு செய்யப்பட்டது.
நிகோபார் தீவுக்கூட்டங்களில் உள்ள மிகப்பெரிய தீவு கிரேட் நிக்கோபார் தீவு. இந்தத் தீவுப்பகுதியில் ஸ்க்ரப் பவுல் மற்றும் மெகாபாட் என்ற இரண்டு அரிய காட்டு கோழியினங்கள் உள்ளன. போர்ட் பிளேர் நகரத்திலிருந்து ஹெலிபாக்டர் சேவைகள் மற்றும் சொகுசுப்படகு மூலமாக இந்த தீவை நாம் அடையலாம்.
நாம் அன்றாட உணவில் உப்பை சேர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன. உணவிலுள்ள நச்சுத்தன்மையைப் போக்கும். செரிமானத்தைப் பலப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். உடல்நலனுக்கு மேலே, மனநலத்துக்கும் ஒரே நிலைப்பாடுடைய மன உணர்வுகளுக்கும் காரணியாக உப்பு அமைகின்றது. நாம் பயன்படுத்தவது இயற்கையான உப்பாக இருப்பது நல்லது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


