மகாராஷ்டிராவை சேர்ந்த முனாப் கபாடியா, தனது தாயார் நபிசா செய்யும் மட்டன் சமோசா மற்றும் உணவுப் பண்டங்களைக்கொண்டு உணவகம் ஒன்றைத் தொடங்க போஹ்ரி கிட்சென் என்ற பெயரில் உணவகம் ஒன்றை மும்பையில் திறந்தார். தனது உணவகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததும் தான் பணிபுரிந்த கூகுள் நிறுவனத்திலிருந்து வேலையை ராஜினாமா செய்து விட்டார்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
குறித்த காலத்தில் பேசாத குழந்தைகளை உடனடியாக பேச வைக்க, குழந்தையை அனைவருடனும் பழக விட வேண்டுமாம். இதன்மூலம், குழந்தை மற்றவர்களிடம் பேசுவதன் அவசியத்தை ஏற்படுத்த முடியும். நல்ல சங்கீதம் மற்றும் பாடல்களை கேட்க செய்வதன் மூலமும் அவர்கள் விரைவில் பேச கற்று கொள்கிறார்களாம்.
2050-ம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. 1964-ம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பயன்பாடு, 2014-ம் ஆண்டில் 311 மில்லியன் டன் (31 கோடி டன்) ஆகிவிட்டது. தற்போது, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கடலில் கலக்கின்றன. இது தொடருமானால், வருகிற 2050-ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 14 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதை 70 சதவீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் பேசும் போது குரலின் ஒலியை வைத்து பேசுபவர் ஆணா அல்லது பெண்ணா என்பதை கூறிவிட முடியும். ஆனால் ஒருவர் பேசிய மொழியை வைத்து இதை பேசியவர் ஆணா, பெண்ணா எனக் கூற முடியுமா.. ஆனால் அப்படி ஒரு விநோதமான இடம் நைஜிரீயாவில் உள்ளது. இங்குள்ள சிறுவர்களும் சிறுமிகளும் ஒரே இடத்தில் வளர்ந்தாலும் இரு வேறு பாஷையையே பேசுகின்றனர். நைஜிரீயாவில் உள்ள உபாங் என்ற கிராமம் தான் அந்த அதிசய மொழி பேசும் கிராமம். எனவே சொற்களை கொண்டே இதை பேசியது ஆணா, பெண்ணா என்பதை சொல்லிவிடலாம் என்றால் ஆச்சரியம் தானே.. உதாரணமாக தண்ணீரை ஆண்கள் பாமுயி என்றால் பெண்கள் அமு என்கின்றனர். இந்த மரபு எப்போதிலிருந்து தொடங்கியது என யாருக்கும் தெரியவில்லை. எனவே ஆண்களின் முன்னால் பெண்கள் தைரியமாக ரகசியங்களை பரிமாறிக் கொள்ளலாம் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்... மாறி வரும் காலச்சூழலில் ஆங்கில கலப்பால் உபாங் மொழி அழியும் நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்..
சுவிஸ் நாட்டில் கினியா பிக் விலங்கை தனியாக வீட்டில் வைத்து செல்லப்பிராணியாக வளர்ப்பது சட்டவிரோதமாகும் ஏனெனில் அவை கூட்டமாக வாழும் விலங்குகள் இனத்தை சேர்ந்தவையாகும் எனவே கினியா பிக் விலங்கை ஒற்றையாக தனியாக வீட்டில் வைத்து வளர்க்க அந்த நாடு தடை விதித்துள்ளது ஆகவே அவற்றை கூட்டமாக வளர்க்கலாமே ஒளிய ஒற்றையாக தனித்து வைத்து வளர்க்கக்கூடாது என்று அந்த நாடு அறிவித்துள்ளது.
ஆடைகள் ஆண் பெண் வேறுபாட்டை காட்டி வருகின்றன என்ற போதிலும் பால் பேதத்தை, அதாவது பாரபட்சமான அணுகுமுறையை அவை உருவாக்கக கூடாது என்ற கருத்து தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக பாலின சமத்துவத்தை அதான்ங்க.. ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை பிரச்சாரம் செய்யும் வகையில் ஸ்பெயினில் உள்ள பில்பாவ் நகரில் இந்த பிரச்சாரம் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு குட்டை பாவாடை அணிந்து வந்த 15 வயது சிறுவனை இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் இந்த பிரச்சாரம் வேகமெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் நகரத்தில் அமைந்திருக்கும் Castleview Primary Schoolதான் தற்போது தனது பள்ளியில் உள்ள மாணவர்களும், மாணவிகளும் குட்டை பாவாடை அதாவது ஸ்கர்ட் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என அறிவித்துள்ளது. பாலின பேதத்தை களைந்து ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரத்துக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


